Jun 10, 2025 - 09:28 AM -
0
இன்று (10) விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 27, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிதமான பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். இளைஞர்களுக்கு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள். புதிய வாகனம் வாங்க நினைத்தால், அது நிறைவேறும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முக்கியமான நாள். சமூக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்து வாங்கும் போது, அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கவும். புதிய வேலை தொடங்க வாய்ப்பு கிடைக்கும். எந்த முடிவையும் எடுக்கும்போது கவனக்குறைவாக இருக்க வேண்டாம். பெற்றோரின் ஆசியுடன், வியாபாரம் தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்ய வாய்ப்பு உண்டு.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாள். வேலை செய்பவர்களுக்கு பயண வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிக்க முடியும். குடும்ப உறுப்பினர்களுடன் முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசுவீர்கள். பெற்றோரை புனித யாத்திரை அழைத்துச் செல்லலாம். குடும்பத்தில் யாராவது உதவி கேட்டால், அவர்களுக்கு உதவுவது நல்லது. எதிர்கால திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான நாள். உங்களின் நல்ல எண்ணங்களைப் பயன்படுத்தி சரியான வேலைகளில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டாம். அலுவலகத்தில் எதிரிகள் உங்களை ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். சொந்த தொழிலில் பெற்றோர்கள் காட்டும் பாதையை பின்பற்றுங்கள். வாழ்க்கைத் துணையிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்கள் துணையின் உடல்நிலை குறித்து கவலைப்படலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வயிற்றுப் பிரச்சனை இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு விருது கிடைக்கலாம். எந்த வேலையிலும் அதிர்ஷ்டத்தை நம்பி செயல்படாதீர்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று இனிமையான சூழல் நிலவும். முன்பு செய்த முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். கவனக்குறைவால் சில வேலைகள் தடைபடலாம். உடல்நிலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்ற ஆர்வம் முன்னேற்றத்திற்கு உதவும். இன்று நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க நண்பர்களுடன் கலந்து பேசினால் தீரும். கூட்டு முயற்சியில் வேலை செய்வது நல்லது. செலவுகளைக் குறைக்காவிட்டால், எதிர்காலத்தில் பணப் பற்றாக்குறை ஏற்படலாம். வியாபார திட்டங்களில் தீவிரமாக பங்கேற்பீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை மேம்படும். நெருங்கியவர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். சில வேலைகள் சரியான நேரத்தில் முடியாமல் போவதால் எரிச்சல் அடைவீர்கள். வீட்டு வேலை மற்றும் வெளியூர் வேலைகளில் பிஸியாக இருப்பீர்கள். அதிகரிக்கும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சில பிரச்சனைகள் நிறைந்த நாள். குழந்தையின் நடத்தை குறித்து கவலைப்படுவீர்கள். உறவினர்களின் உடல்நிலை மேம்படும். நிறைவேறாத சில கனவுகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரம் செய்பவர்கள் புதிய இயந்திரங்களை வாங்கலாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கடின உழைப்பு தேவைப்படக்கூடிய நாள். கடினமாக உழைத்தால் மட்டுமே நல்ல நிலையை அடைய முடியும். ஆன்லைனில் வேலை செய்பவர்களுக்கு பெரிய ஆர்டர் கிடைக்கும். மற்றவர்களை நம்பி இருக்க வேண்டாம். அண்டை வீட்டுக்காரர்களுடன் சண்டையிட வேண்டாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த கவலைகள் நீங்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சாதாரணமான நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செலவுகள் அதிகரிப்பது குறித்து கவலைப்பட்டால், மூத்த நபர்களின் ஆலோசனை உதவும். வேலையில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்யலாம். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தால், அது குறித்து கவலைப்படுவீர்கள். வேலை செய்பவர்கள் வேலைப்பளு காரணமாக கொஞ்சம் கவலைப்படுவார்கள்.