ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் (07.08.2025)

Aug 7, 2025 - 09:17 AM -

0

இன்றைய ராசிப்பலன் (07.08.2025)

இன்று (07) தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குடியேறும் சந்திரன், மங்களகரமான சம்சப்தக யோகத்தை உண்டாக்குகிறார். இதனுடன் பூராடம் நட்சத்திரத்தில் அரிய ரவி யோகமும் உண்டாகிறது. வேத ஜோதிடத்தில் மங்களகரமான யோகங்களாக கருதப்படும் இந்த யோகங்கள், மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசியினருக்கும் அவரவர் கர்ம வினைகளின் அடிப்படையில் தனித்துவமான பலன்களை அளிப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
 

மேஷம்
 

ஆற்றல் மிக்க மேஷ ராசியினர் இன்றைய தினம் தங்கள் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மூட்டுவலி, நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் நபர்கள் இன்றைய தினம் தங்கள் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். இன்றைய தினம் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள், விருந்தினர் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்கள் எதிர்காலம் தொடர்பான ஒரு நல்ல செய்தியையும் கொண்டு வரும்.

 

ரிஷபம்
 

சுக்கிரனை ஆளும் கிரகமாக கொண்ட ரிஷப ராசியினர் இன்றைய தினம் உற்சாகத்துடன் இருப்பார்கள். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும், நீண்ட நாட்களாக உங்கள் மனதை குழம்பி வந்த விஷயங்களுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்காலம் குறித்த குழப்பங்கள் மறையும், மன நிறைவான - நிம்மதியாக வாழ்க்கைக்கு வழி காண்பீர்கள். நிதி நிலையில் ஏற்றம் காண்பீர்கள், கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
 

மிதுனம்
 

மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் தொழில் வாழ்க்கையில் ஏற்றம் காணும் ஒரு தினமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும், ஏற்கனவே செய்து வரும் தொழிலில் போதுமான வருமானமும் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோகியத்தில் சிறு பின்னடைவு காணலாம், குழந்தைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்த எதிர்வரும் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம்.
 

கடகம்
 

குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் ஒரு தினமாக இன்று அமையும். உறவினர் வீட்டு விஷேசத்தில் பங்கேற்கும் விதமாக உங்கள் குடும்ப உறவுகளுடன் ஒன்றாக இணைந்து வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பயணங்களின் போது பாதுகாப்பாக இருங்கள். உறவினர்களுடன் கூடி இன்றைய தினம் மகிழ்ச்சியாக செலவிடும் அதேநேரம், தொழில் வாழ்க்கையிலும் எதிர்பார்த்த ஒரு நற்செய்தி கிடைக்கும்.
 

சிம்மம்
 

​ஆளுமை மிக்க சிம்ம ராசியினர் இன்றைய தினம் தங்கள் பணியிடத்தில் உயர் பதவிகளை எட்டும் வாய்ப்பு காணப்படுகிறது. கூடுதல் பொறுப்பு கிடைக்கும், தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டாகும். உங்கள் திறமைகளை கண்டு உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் இன்று காணப்படுகிறது.
 

கன்னி
 

கன்னி ராசியினர் இன்றைய தினம் நிதி சார்ந்த ஆதாயங்களை காணும் வாய்ப்பு காணப்படுகிறது. முன்னர் செய்து வைத்த முதலீடுகள் வழியே எதிர்பாராத லாபம் கிடைக்கும் வாய்ப்பு இன்று காணப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உங்கள் வாழ்க்கை துணை உதவியாக இருப்பார். உலோகம் சார்ந்த தொழில் செய்து வரும் நபர்கள் இன்று கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
 

துலாம்
 

துலாம் ராசியினர் இன்றைய தினம் தங்கள் பட்ஜட்டிற்குள் செலவு செய்வது நல்லது. அநாவசிய செலவுகள் கூடாது, அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் முன்னுரிமை அளியுங்கள். குடும்ப உறவுகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இன்று அதிகம் செலவழிக்க நேரிடலாம், கடன் வாங்கும் சூழ்நிலையும் உண்டாகலாம். இருப்பினும், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்த கூடுதல் செலவை கட்டுப்படுத்தலாம்.
 

விருச்சிகம்
 

விருச்சிக ராசி நண்பர்கள் இன்றைய தினம் கடுமையாக உழைக்க வேண்டிய ஒரு தினமாக இருக்கும். தங்கள் பணியிடத்தில் அலைச்சல் நிறைந்து காணப்படும், தினசரி கடமைகளை முடிப்பதில் கால தாமதம் உண்டாகலாம். சக ஊழியர்களுடன் கனிவாக நடந்துக்கொள்ளுங்கள், இன்று உங்கள் பணிகளை உடன் பணிபுரியும் நண்பர்களுடன் பகிர்ந்து விரைவாக செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள்.
 

தனுசு
 

தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் இரண்டாம் வருமானத்திற்கான வழி பிறக்கும் ஒரு தினமாக இருக்கும். குறிப்பாக, பூர்வீக சொத்து வழியே புது வருமானம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. நிதி சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகலாம், இந்த பிரச்சனைகளை சமாளிக்க உங்கள் வாழ்க்கை துணை உதவியாக இருப்பார். குழந்தைகள் வழியே நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். அலைச்சல் நிறைந்த இன்றைய தினத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள மன நிறைவு காணலாம்.
 

மகரம்
 

மகர ராசியினரின் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும் ஒரு தினமாக இன்று அமையும். மண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும், தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகள் அகலும். புதிய தொடக்கத்திற்கான தினமாக இன்று பார்க்கப்படும் நிலையில், உங்கள் செயல் திட்டங்களை இன்று தைரியமாக செயல்படுத்தலாம். காதல் துணை (அ) வாழ்க்கை துணையுடன் இன்றைய தினம் இரண்டாம் பாதியை மகிழ்ச்சியாக செலவிடும் வாய்ப்பு காணப்படுகிறது.
 

கும்பம்
 

​படைப்பாற்றல் மிக்க கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் சேமிப்பிற்கு தினம் ஆகும். ஆம், தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் சேமிப்பு திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு தினமாக இன்று பார்க்கப்படுகிறது. பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், உங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரையில் தம்பதியரிடையே பரஸ்பர புரிதல் உண்டாகும், வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.
 

மீனம்
 

மீன ராசியினர் இன்றைய தினம் தங்கள் உடல் நலன் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குறிப்பாக எடுத்துக்கொள்ளும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இன்றைய தினம் குடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகலாம், உணவு ஒவ்வாமை பிரச்சனையும் உண்டாகலாம். இதனை தவிர்க்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. பண விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Comments
0

MOST READ

காணொளி
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சிறப்பு பூஜை செய்து ஆசி பெற்றார்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சிறப்பு பூஜை செய்து ஆசி பெற்றார்

இன்றைய செம்மணியின் அகழ்வுப்பணிகள்!

இன்றைய செம்மணியின் அகழ்வுப்பணிகள்!

ஜனாதிபதி செம்மணியை பார்வையிடுவாரா?

ஜனாதிபதி செம்மணியை பார்வையிடுவாரா?

புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 16 எலும்புக்கூட்டு தொகுதிகள்

புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 16 எலும்புக்கூட்டு தொகுதிகள்

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆதரவாளர்கள்!

மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆதரவாளர்கள்!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

அதை வைத்தியசாலையில் தான் கேட்க வேண்டும் தம்பி!

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?


ஸ்ஷோட்ஸ்
ஆர்ப்பாட்டத்திற்கு இடையே பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

ஆர்ப்பாட்டத்திற்கு இடையே பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

அவங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த சட்னியா?

சோமரத்ன ராஜபக்ச ஏனைய மனி புதைக்குழிகளையும் காட்டுவதற்கும் தயார்!

சோமரத்ன ராஜபக்ச ஏனைய மனி புதைக்குழிகளையும் காட்டுவதற்கும் தயார்!

எங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்க்கின்றோம்!

எங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்க்கின்றோம்!

இதற்கு தீர்வு தான் என்ன?

இதற்கு தீர்வு தான் என்ன?

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்!

நுவரெலியாவில் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!

நுவரெலியாவில் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!

பிமல் ரத்நாயக்க கரிசனையுடன் செயல்படுவர் என்று நம்புகிறேன்

பிமல் ரத்நாயக்க கரிசனையுடன் செயல்படுவர் என்று நம்புகிறேன்

தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய ஓட்டுநர்

தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய ஓட்டுநர்

யாழில் ஹர்த்தால் நிலவரம்

யாழில் ஹர்த்தால் நிலவரம்