Oct 19, 2025 - 09:12 AM -
0
இன்று (19) சுபமுகூர்த்த தினமும், மாத சிவராத்திரி கூடிய தினம். இன்று புதாதித்ய யோகம் உள்ள தினம். இன்று சந்திர பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ளது. இன்று மகர, கும்ப ராசியில் அவிட்டம், சதயம் நட்சத்திரத்திற்கு சந்திரஷ்டமம் உள்ளது.
மேஷ ராசி பலன்
இன்று மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு உடல் நலம் குறித்து கவலைகள் ஏற்படும். பண செலவுகள் ஏற்படலாம். என்று நீங்கள் மன அழுத்தத்தை அனுபவிக்க வாய்ப்பு உண்டு. ஆன்மீகம் மற்றும் சமூகம் தொடர்பான நடவடிக்கை பங்கேற்பார்கள். இந்த தொழில் தொடர்பான விஷயங்களில் உங்கள் சகோதரர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும்.இன்று உங்கள் பேச்சு மற்றும் செயல்பாடுகளில் கவனம் தேவை. உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடுகளை ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணத்திற்கு முயற்சி செய்யக் கூடிய நபர்களுக்கு நல்ல வரன் அமையலாம்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசி தெரிந்தவர்களுக்கு உங்கள் பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.. இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மாணவர்கள் உயர்கல்வியை பெறுவதில் சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று குடும்ப செலவுகள் கட்டுப்படுத்துவது அவசியம். என்று குழந்தைகளுடன் விளையாடவும், ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். புதிய முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சில விஷயங்கள் குறித்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை உங்கள் மனதிற்கு தொந்தரவு தரும். இன்று உடன் பிறந்தவர்களின் திருமணம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் பெற்றோருக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
கடக ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய முன்னேற்றத்திற்கான நம்பிக்கை மனதில் ஏற்படும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வாய்ப்பு உண்டு. சோம்பலை முறியடிப்பீர்கள். இன்று வெளிநாடு தொடர்பான வர்த்தகத்தில் எதிர்பார்த்த வெற்றி பெறுவீர்கள். உங்கள் வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்தால் செய்யக்கூடிய எந்த ஒரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் மனைவியுடனும், பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து சில நபர்களிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். திருமணத்திற்கான முயற்சிகளில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். இன்று ஏழைகளுக்கு உதவும், தான தர்மங்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உங்கள் மனைவியின் அன்பை ஆதரவையும் பெறுவீர்கள். ஆன்மீகம், சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தை காண்பார்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படும். செலவுகளால் நிதிநிலைமை பாதிக்க வாய்ப்பு உண்டு. சோம்பல் மற்றும் கவலையை விடுத்து முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவும். இன்று நண்பர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் குடும்பம் மற்றும் பணியிடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். பேச்சை கட்டுப்படுத்தவும். இன்று காதல் வாழ்க்கையில் இனிமையான சூழல் நிலவும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றியை பெறுவார்கள். இன்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் முடிவுக்கு வரும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி நண்பர்களுக்கு தொழிலில் குடும்ப ஆதரவை பெறுவீர்கள். உங்களின் சிரமங்கள் குறையும். இன்று பணியிடத்தில் அதிக வேலை செய்ய வேண்டியது இருக்கும் இதனால் உடல் சோர்வு சந்திக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உங்களுக்கான அதிகாரம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க திட்டமிடமும் தைரியமும் தேவைப்படும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக சில நிதிசைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று ஆபத்தான முதலீடுகளையும் முயற்சிகளையும் தவிர்க்க வேண்டிய நாள்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். குறிப்பாக உங்களுடைய உணவு பழக்கவழக்கத்தில் கவனம் செலுத்தவும். சிலருக்கு வயிறு தொடர்பான தொந்தரவுகள் ஏற்படும். சில வணிகத் திட்டங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மையை தரும். தொழிலில் லாபம் தரக்கூடிய வகையில் சில புதிய மாற்றங்களை செய்வீர்கள். இன்று உங்கள் குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகள் பெறுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் புதிய ஆற்றல் நிறைந்திருக்கும். உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுக்கான நாளாக அமையும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவையும் பெறுவீர்கள். திருமண உறவு மேம்படக்கூடிய நாள். இன்று தொழிலில் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். அப்போதுதான் எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். இன்று மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து நல்ல ஆதரவை பெறுவீர்கள். போட்டி தேர்வுக்கான விஷயங்களில் ஆர்வத்துடன் படிப்பீர்கள். இன்று மாலை நேரத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
மகர ராசி பலன்
மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடையும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் வேலை தொடர்பான விஷயங்களில் பரபரப்பான நாளாக அமையும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் உதவி கிடைக்கும். அதனால் வேலையை வேகமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். இன்று முக்கியமான முடிவுகளை கவனமாக எடுக்கவும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உங்கள் புகழ் அதிகரிக்க கூடிய நாள்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு எதிர்காலத்திற்கான புதிய திட்டங்கள் சாதகமான பலனை தரும். நீங்கள் மேற்கொள்ளக் கூடிய எந்த வேலையும் பெற்றோரின் ஆசிர்வாதத்தால் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவும் அவர்களிடம் நற் பெயரும் கிடைக்கும். இன்று மாணவர்கள் படிப்பு தொடர்பாக ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். உங்கள் துணையின் முழு ஆதரவு மன ஆறுதலை தரக்கூடியதாக அமையும். உங்கள் தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். குடும்ப பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள்.
மீன ராசி பலன்
மீன ராசி சேர்ந்தவர்களுக்கு குழந்தைகள் மற்றும் கணவரின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. வேலையில் இருப்பவர்கள் மனப்பதட்டத்தை சந்திப்பீர்கள். இன்று தந்தையின் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. இன்று வேலை தொடர்பாக சிரமங்களும் வேலைப்பளுவும் எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு அதனால் கடினமான மனநிலை மற்றும் சோர்வுகள் நீங்கும்.

