Oct 20, 2025 - 09:20 AM -
0
ஜோதிட நிபுணர்கள் கூற்றுப்படி இந்த தீபாவளி தினத்தின் போது (அக்டோபர் 20, 2025 அன்று) குரு தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணம் செய்கிறார். தனது உச்ச ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு, வக்கிரமாக மாறி ஹன்ஸ் மஹாபுருஷ ராஜயோகத்தை உண்டாக்குகிறார். குரு பகவானின் இந்த சுவாரஸ்யமான கிரக நிலை மாற்றங்கள், மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக ஒரு சில ராசியினருக்கு தொழில் வளர்ச்சி, வருமானம், முன்னேற்றத்தை உறுதி செய்கிறார். குரு பகவானின் நிலை மாற்றத்தால் உண்டாகும் இந்த சிறப்பு பலன்கள் யாருக்கு என்ன பலன் அளிக்கிறது? என்பது குறித்து சற்று விரிவாக காணலாம்!
கடகம்
மங்களகரமான ஹன்ஸ் ராஜயோகமானது உங்கள் லக்ன வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. குரு பகவானின் பெயர்ச்சியால் உண்டாகும் இந்த ராஜயோகம், கடக ராசியினரின் காதல் வாழ்க்கை மற்றும் மண வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது. அதாவது, காதல் செய்து வரும் நபர்கள் தங்கள் பெற்றோர் அனுமதியுடன் திருமண பந்தத்தில் இணைவார்கள். ஏற்கனவே திருமணம் முடித்தவர்கள் தங்கள் குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு பெறுவார்கள்.
குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படும், நீண்ட காலமாக வராமல் இருந்த பணத்தை விரைவில் வசூலிப்பீர்கள். நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரும், தடைபட்ட காரியங்களும் விரைவில் நல்லபடியாக முடிவடையும். நிதி நிலையில் காணப்படும் ஏற்றம், உங்கள் கடன் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்!
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு மதிப்பும் - மரியாதையும் கிடைக்கும் ஒரு காலமாக இது அமையும். ஆளுமை மிக்க ராசியாக கருதப்படும் சிம்ம ராசியினருக்கு அதிகாரம் மிக்க பதவிகளை கொண்டு வரும் ஒரு ராஜயோகமாக இந்த ஹன்ஸ் ராஜயோகம் பார்க்கப்படுகிறது. உங்கள் குடும்ப உறவின் முழுமையான ஆதரவுடன் புதிய தொழில் தொடங்குவீர்கள், உங்களின் நீண்ட நாள் திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
அந்த வகையில் சமூகத்தில் உயரிய அந்தஸ்த்து பெறும் வாய்ப்பு காணப்படுகிறது. திருமணம் முடித்தவர்கள் வாழ்க்கையில் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும், நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பும் காணப்படும். பெற்றோர் வழி ஆதரவு உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் காணப்பட்ட மனஸ்தாபங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளும் முடிவுக்கு வரும்.
துலாம்
குரு பகவானின் சஞ்சாரத்தால் உண்டாகும் இந்த ஹன்ஸ் ராஜயோகம், துலாம் ராசியினரின் ஜாதகத்தில் 10-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறார். இந்த மாற்றம் ஆனது பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட தொழில் வாழ்க்கை வளர்ச்சியை உறுதி செய்கிறது. பணியிடத்தில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும், நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பணிகளில் அமருவீர்கள். அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும், தலைமைப் பொறுப்பில் அமரும் வாய்ப்பும் கிடைக்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும், உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து உங்கள் வளர்ச்சிக்கான வழிகளை உறுதி செய்வீர்கள். தொழில் வாழ்க்கையில் மட்டும் அல்ல, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்றம் காணும் ஒரு சிறப்பு தினமாகவும் இன்று அமையும். பணத்தை சேமிக்கும் வழிகள் கிடைக்கும், செலவுகள் குறையும், வாழ்க்கை லட்சியங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினரின் ஜாதகத்தில் 9-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த ஹன்ஸ் ராஜயோகம், அவர்களின் ஆர்வத்தை தூண்டுகிறார். அதாவது, பணியிடத்தில் உற்சாகமாக செயல்பட தூண்டுகிறார் - தொழில் வாழ்க்கையில் வெற்றி காண அனுமதிக்கிறார். பணிக்காக வெளிநாடு செல்ல விரும்பும் நபர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. இதேப்போன்று சுயமாக தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கும் எதிர்பார்த்த படி நல்ல செய்தி ஒன்று கிடைக்கும்.
தொழில் வளர்ச்சிக்காக மற்றும் மன மகிழ்ச்சிக்காக சில பல பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் காணப்படுகிறது. குறித்த இந்த காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியில் முடியும். ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், தங்கள் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை காணும் ஒரு சிறப்பு தினமாக இன்று அமையும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தனுசு
தனுசு ராசியினரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தால் வெற்றிகளை கொண்டு வரும் ஒரு சிறப்பு யோகமாக இது பார்க்கப்படுகிறது. தனுசு ராசியினரின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், குறிப்பாக வாழ்க்கை லட்சியம் தொடர்பான விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். அலுவலக பணி மேற்கொண்டு வரும் நபர்கள், தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துவார்கள்.
தங்களின் முழுமையான திறமையை வெளிப்படுத்துவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவுடன் பதவி உயர்வு காணும் வாய்ப்பும் காணப்படுகிறது. பண விஷயத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். நிலுவையில் இருந்த பணம் விரைவில் வீடு தேடி வரும். இதனிடையே மண வாழ்க்கையில் மகத்தான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பும் காணப்படுகிறது. அதாவது, திருமண தடை நீங்கி விரைவில் திருமணத்தை முடிக்கும் வாய்ப்பும் காணப்படுகிறது.

