Oct 23, 2025 - 08:30 AM -
0
இன்று (23) மூன்று கிரகங்களின் சேர்க்கை துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றனர்.. சந்திர பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். அதோடு அங்கு செவ்வாய், சூரியன், புதன் என திரி கிரக யோகம் உண்டாகிறது. இன்று ராசியில் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று சித்த யோகம் உள்ளது. நாள் முழுவதும் மீன மீன ராசியின் ரேவதி நட்சத்திரத்திற்க்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷ ராசி பலன்
இன்று உங்களுடைய தொழில் தொடர்பான முயற்சிகளில் கணிசமான லாபத்தை பெறுவது. மகிழ்ச்சி நிறைய கூடிய நாள். சமூகம் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள். உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். உங்களின் ஆசையை நிறைவேற்ற பணம் செலவழிக்க வாய்ப்பு உண்டு. கொஞ்சம் சோர்வாக உணர்வீர்கள். தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று பிள்ளைகளின் திருமணம் தொடர்பான நேர்மறை செய்திகளை பெறுவீர்கள். உங்களுடைய பணி சூழல் சாதகமாக இருக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதரவு கிடைக்கும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று படிப்பு உள்ளது கல்வி தொடர்பாக பயணங்கள் செல்ல நேரிடும். இன்று உங்களுடைய வருமானத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று வீட்டில் வழிபாடு சுப காரியங்கள் நடக்கும். உங்களுக்கு மனதிற்கு இனிமையான தருணங்கள் அமையும். இன்று உங்களுடைய பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் பேச்சில் கட்டுப்பாடு தேவை. பிள்ளைகளின் செயல்பாடு மற்றும் வெற்றி கண்டு மகிழ்வார்கள்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு ஏதேனும் சட்ட தகராறு இருந்தால் அது தொடர்பான மன அழுத்தம் ஏற்படும். இது போன்ற நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வேலையை தடுக்க சிலர் முயற்சிப்பார்கள். உங்கள் வேலையை கன்னங்கருதமாக செய்து முடிப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழல் உருவாகும். மாணவர்களே தங்களின் எதிர்காலம் தொடர்பாக கவலைப்படுவார்கள்.
கடக ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு நீண்ட காலம் தனிப்பட்ட வந்த வேலைகள் முடியும். இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளி உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். சிலருக்கு உடல் நலம் மோசம் அடைய வாய்ப்பு உண்டு. பெற்றோருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் சந்திப்பார்கள். இன்று உங்கள் பணியிடத்தில் சிறப்பான வேலை மற்றும் பேச்சாற்றலால் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். சில நல்ல செய்திகளை பெற வாய்ப்பு உண்டு. உங்களின் நிதி நிலை மேம்படும் நாள்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக சிறப்பான சூழல் நிலவும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்ய வேண்டியது இருக்கும். இது எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க நன்மையை தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்கள் வேலை எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நேரம். நண்பர்கள் நண்பர்களிடமிருந்து ஆதரவும் நிதி நன்மைகளும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு வணிகம் தொடர்பான விஷயங்களில் பரபரப்பான நாளாக இருக்கும். வேலை தொடர்பான பயிற்சிகள் தேவைபப்டும். நீண்ட காலமாக எதிர்பார்த்த சில நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியான பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.. இந்த குடும்ப உறுப்பினர் அவர்களுடன் வலுவான பிணைப்பு இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் அமையும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி நண்பர்களுக்கு இன்று பள்ளி தொடர்பாக முக்கியமான நாளாக இருக்கும். இதிலும் கவனமாக முடிவுகள் எடுக்க வேண்டியது அவசியம். அரசாங்கம் தொடர்பான சில சலுகைகள் கிடைக்கும். ஆபத்தான முயற்சிகளை தவிர்க்கவும். உங்கள் இனிமையான வார்த்தை சுற்றியுள்ளவர்களின் மனதை வெல்ல முடியும். உங்களுடைய வேலை, வியாபாரம் தொடர்பான விஷயங்கள் வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு அது தொடர்பான முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு உங்களுடைய வீரம் மற்றும் தைரியத்தால் எதிரிகள் கூட சரணடைவார்கள். இந்த முயற்சிகளை எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குழந்தைகள் மீதான அன்பு அதிகரிக்கும். இன்று உங்கள் மனைவிக்கு பரிசுகள் கொடுக்க நினைப்பீர்கள். உங்களுடைய மாமியார் வீடு சொந்தங்கள் மூலம் ஆதரவு, மரியாதையும் கிடைக்கும். இன்று உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். பேச்சு செயலில் நிதானம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பெரியவர்கள் மற்றும் கடவுள் ஆசிர்வாதம் நிறைந்த நாள். இன்று எந்த ஒரு செயலிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவீர்கள். உங்களுடைய புத்திசாலித்தனம், ஞானத்தால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய வணிகம் செழிக்கும். பிறரிடம் சிக்கியுள்ள பணத்தையும் இன்று நீங்கள் மீட்டெடுக்கலாம். குழந்தைகளின் உடல் நல்ல பிரச்சனை ஏற்படலாம். இது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இன்று உங்கள் பெற்றோருக்கு ஒரு பரிசு கொடுக்க நினைப்பீர்கள்.
மகர ராசி பலன்
இன்று உங்களுக்கு கணிசமான அளவு பணம் கிடைக்கலாம், இது உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். கூட்டுத் தொழில் கணிசமான லாபத்தைத் தரும். உங்கள் துணைவரிடமிருந்து மகிழ்ச்சியைக் காண்பீர்கள். நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று மாலை வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள், ஏனெனில் நீங்கள் காயமடையக்கூடும். இன்று, உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில செலவுகளைச் சந்திக்க நேரிடும். நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்தால், அது இப்போது முடிவடையும்.
கும்பம் ராசி பலன்
இன்று கவனமாக முடிவெடுப்பதற்கான நாளாக இருக்கும்.உங்களுடைய பொறுமை மற்றும் நிதானமான முடிவுகள் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். இன்று உங்களுடைய தேவைகளுக்காக பணத்தை அதிகம் செலவிடுவீர்கள். தொழிலில் முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள். உங்களின் செயல்பாடு எதிர்காலத்தில் சிறப்பான பலனை தரும். உங்கள் குழந்தைகள் தொடர்பாக இருந்த கவலைகள் தீரும். மாணவர்கள் படிப்பு, தேர்வு நல்ல வெற்றியை பெறுவார்கள்.
மீன ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சில சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் உடல் நலனில் பிரச்சனைகள் ஏற்படும். சில செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கவும் நேரிடும். இந்த தொழில் தொடர்பாக புதிய திட்டங்களை வகுத்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். வங்கிக் கடன் வாங்குவது குறித்து யோசித்தால், அது எளிதாகப் பெறுவீர்கள். உங்கள் குடும்பத் தொழில் தொடர்பாக உங்கள் தந்தையிடம் ஆலோசனை கேட்பீர்கள். ஒவ்வொரு செயல்களுக்கும் உங்கள் மனைவி உறுதுணையாக இருப்பார்.

