ஜோதிடம்

30 ஆண்டுகளுக்கு பின் உண்டாகும் அரிய யோகம்!

Dec 29, 2025 - 11:36 AM -

0

30 ஆண்டுகளுக்கு பின் உண்டாகும் அரிய யோகம்!

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஜனவரி 2026 இல் அரிய சதுர்கிரஹி யோகம் உண்டாக காத்திருக்கிறது. சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 4 கிரகங்களின் சேர்க்கையில் உண்டாகும் இந்த சதுர்கிரஹி யோகமானது, சிம்மம் உள்ளிட்ட 5 ராசியினருக்கு பொற்காலத்தை கொண்டு வருகிறது. குறிப்பாக, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான வசதி வாய்ப்புகள், பண வரவு மற்றும் எதிர்பார்த்த லாபத்தையும் கொண்டு வருகிறது! 

வேத ஜோதிட கணிப்புகள் படி கடந்த டிசம்பர் 16 தொடங்கி சூரியன் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். இதேப் போன்று டிசம்பர் 7 தொடங்கி செவ்வாய் கிரகமும், டிசம்பர் 29 தொடங்கி புதன் கிரகமும் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜனவரி 2026 இன் முதல் பாதியில் சந்திரனும் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய வலிமையான சதுர்கிரஹி யோகம் உண்டாகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் உண்டாகும் இந்த அரிய யோகமானது, அனைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை கொண்டு வருகிறது. அந்த வரிசையில் மேஷம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய 4 ராசியினருக்கு கூடுதல் நன்மைகள் கொண்டு வருகிறது! 

மேஷம் - அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு வாசலை தட்டும், 

தனுசு ராசியில் உருவாக இருக்கும் சதுர்கிரஹி யோகமானது, உங்கள் ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் உண்டாகிறது. குறித்த இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடி தரும். குறிப்பாக, முதலீடு சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் வருமானத்தை பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். 

குறித்த இந்த நேரத்தில் மதம் சார்ந்த விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இறை வழிபாடு நல்லத, என்ற போதிலும் அதீத ஈடுபாடு கூடாது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள், கடுமையாக உழையுங்கள் - அதற்கான பலனை பெற்றிடுங்கள். 

சுய தொழில் செய்து வரும் நபர்கள், தங்கள் தொழிலை சர்வதேச அளவில் விரிவுப்படுத்தும் வாய்ப்பு காணப்படுகிறது. அலுவலக பணி மேற்கொண்டு வரும் நபர்கள், தங்கள் உயர் அதிகாரிகளிடம் இருந்து வேண்டிய ஆதரவினை பெறுவார்கள். படித்து முடித்து பணி தேடும் நபர்களுக்கும் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. 

சிம்மம் - புதிய வாய்ப்புகள் கிடைக்கும், 

சிம்ம ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் 5 ஆவது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த சதுர்கிரஹி யோகமானது, உங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை கொண்டு வருகிறது. உங்கள் உடல் ஆரோக்கியத்திலும், உங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை கொண்டு வருகிறது. 

காதல் உறவில் வெற்றியை கொண்டு வருவீர்கள் - தொழில் வாழ்க்கையிலும் புதிய விஷயங்களை முயற்சி செய்வீர்கள். சட்டம் சார்ந்த துறைகளில் பணியாற்றி வரும் நபர்கள், தங்கள் துறையில் உயர் பதவிகளை அடையும் ஒரு சிறப்பு காலமாக இது இருக்கும். புதன் கிரகத்தின் நேரடி பார்வை உங்கள் பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும். இதன் தாக்கம் உங்கள் தொழில் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். 

பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த கௌரவம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி தொடர்பாக பயணங்கள் செய்ய விரும்பும் நபர்களுக்கு, எதிர்பார்த்த நற்செய்திகள் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்களும் கிடைக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்! 

தனுசு - திறமைக்கு ஏற்ற வெகுமதிகள் கிடைக்கும், 

தனுசு ராசி கொண்டவர்கள் தங்கள் திறமைக்கான அங்கீகாரம், வெகுமதிகள் கிடைக்கும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. சூரியனின் ஆளுமை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சவால்கள் நிறைந்த பணிகளை எடுத்து செய்ய அனுமதிக்கும். உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும், உங்கள் தனித்திறமைகளை முழுவதுமாக பயன்படுத்தி சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்த்து காணும் ஒரு தினமாகவும் இன்று பார்க்கப்படுகிறது. 

குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் காணப்படும் போட்டிகள் குறையும், தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். திருமணம் முடித்தவர்கள், முன்னர் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியான ஒரு திருமண வாழ்க்கையை அனுபவிப்பார்கள். குழந்தை பாக்கியம் தொடர்பான செய்திகளும் கிடைக்கும்! 

கும்பம் - தடைகள் விலகும், வெற்றிகள் குவியும், 

கும்ப ராசி கொண்டவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வரும் ஒரு சிறப்பு யோகமாக இது பார்க்கப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகள் விலகும், எதிர்பார்த்த மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும். தொழில் போட்டிகள் குறையும், உங்கள் தொழிலை சர்வதேச அளவில் விரிவுப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். 

கல்வி சார்ந்த துறையில் பணியாற்றி வரும் நபர்கள், தங்கள் துறையில் உயர் பதவிகள் காணும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. பொருளாதார விஷயங்கள் உங்களுக்கு சாதமாக இருக்கும். செய்யும் முதலீடுகளுக்கு அதிகமாகவே வருமானம் கிடைக்கும். கிடைக்கும் வருமானத்தை சரியான வழிகளில் முதலீடு செய்து, எதிர்பார்த்த லாபத்தை கொண்டு வருவீர்கள். 

உங்கள் விருப்பமான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்கி குவிக்கும் ஒரு தினமாகவும் இன்று பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
20 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது

20 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!

டக்ளஸ் தேவானந்தாவிற்கு அனைத்து பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும்!

டக்ளஸ் தேவானந்தாவிற்கு அனைத்து பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும்!

யாழ். ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழ். ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா

நாங்கள் சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா?

நாங்கள் சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா?

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வாக்குவாதம்

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வாக்குவாதம்

சிறீதரனுக்கும் அர்ச்சுனாவுக்கும் கடுமையான வாக்குவாதம்!

சிறீதரனுக்கும் அர்ச்சுனாவுக்கும் கடுமையான வாக்குவாதம்!

முல்லைத்தீவில் நினைவேந்தல் நிகழ்வு

முல்லைத்தீவில் நினைவேந்தல் நிகழ்வு

மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

 ஹட்டனில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

ஹட்டனில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி!


ஸ்ஷோட்ஸ்