ஜோதிடம்

மாமியாருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் மருமகன்களின் ராசிகள்!

Jan 17, 2026 - 03:10 PM -

0

மாமியாருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் மருமகன்களின் ராசிகள்!

மாமியார் - மருமகள் உறவுக்கு அடுத்தப்படியாக, அதிகம் பேசப்படும் உறவுகளில் ஒன்று மாமியார் - மருமகன் உறவு. தன் மகளை திருமணம் செய்யும் ஆண் மகனை, தனது சொந்த மகனாக ஏற்கும் மாமியார்களுக்கு, அவர்களின் மருமகன்கள் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தன் மாமியாருக்கு அதிர்ஷ்டத்தை பரிசாக கொண்டு வரும் மருமகன்கள் யார்? இவர்கள் எந்த ராசியில் பிறப்பார்கள்? என்பது குறித்து சற்று விரிவாக நாம் இங்கு காணலாம்! 

வேத ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளும் தனித்துவமான பண்புகள் மற்றும் குணாதிசயங்களை கொண்டுள்ளன. தங்கள் ராசி மற்றும் கிரகங்களின் நிலைக்கு ஏற்ற தனக்கான தனித்துவமான பலன்களை பெறுவதோடு, தன்னை சார்ந்து உள்ளவர்களுக்கும் தனித்துவமான பலன்களை அளிக்கின்றனர். அந்த வரிசையில், தங்கள் மாமியாருக்கு நற்பலன்களை கொண்டு வரும் அதிர்ஷ்டக்கார ராசிகள் எது? குறிப்பாக, மாமியாருக்கு நற்பலன்களை கொண்டுவரும் அதிர்ஷ்டக்கார ஆண்களின் ராசி எது? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்! 

கடகம் 

​கடக ராசி கொண்டவர்கள் அடிப்படையில் கருணை உள்ளம் கொண்டவர்கள். மற்றவர்கள் மீது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் நபர்கள். தனது நலனை காட்டிலும் தன்னை சார்ந்து உள்ளவர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்த கூடியவர்கள். குடும்ப விவகாரங்களில், வீட்டில் இருக்கும் பெரியவர்களை முன்னிலைப்படுத்தும் குணத்திற்கு சொந்தக்காரர்கள். 

தன் குடும்ப நலனுக்கு முன்னுரிமை அளிக்க கூடியவர்கள், அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் இருக்கின்றனர். அந்த வகையில், தன் குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் ஒரு தேவ தூதராக இவர்கள் பார்க்கப்படுகின்றனர். தனது சொந்த குடும்பத்தினர் மற்றும் தனது வாழ்க்கை துணையின் குடும்ப உறவுகள் அனைவரின் நலனையும், தனது ராசியின் அதிகாரத்தால் உறுதி செய்கின்றனர். 

அந்த வகையில், கடக ராசி ஆண்களை மருமகனாக பெறும், பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த நற்பலன்களை காண முடியும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

ரிஷபம் 

கடக ராசியினருக்கு அடுத்தபடியாக தனது மாமியாருக்கு அதிர்ஷ்டத்தால் வெற்றிகளை அள்ளிக் கொடுக்கும் ஒரு ராசியாக ரிஷப ராசி பார்க்கப்படுகிறது. ரிஷப ராசி கொண்டவர்கள், சுக்கிரனை ஆளும் கிரகமாக கொண்டுள்ளனர். அழகு, ஆடம்பரம், செல்வம், கலை, செழுமையை பிரதிபலிக்கும் சுக்கிரனை ஆளும் கிரகமாக கொண்ட ரிஷப ராசியினர் மற்றவர்கள் மீது அளவு கடந்த அன்பு செலுத்தக்கூடியவர்கள். 

அதேநேரம் மற்றவர்களுக்கு நம்பகமான நண்பர்கள் - உறவினர்களாகவும் இருக்கின்றனர். அந்த வகையில் தனது மாமியார் உள்ளிட்ட குடும்ப உறவுகளுக்கு பக்க துணையாகவும், படை தளபதியாகவும் இவர்கள் இருப்பார்கள். சுக்கிரனின் நேரடி பார்வையால் பலன்கள் பல காணும் ரிஷப ராசியினர், தங்கள் ராசியின் பலனை தனது உறவினர்களுடனும் பகிர்ந்துக் கொள்கின்றனர். 

துலாம் 

துணிச்சலான முடிவுகளை எடுக்கும் துலாம் ராசியினர் தங்களின் ராஜதந்திரங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு பெயர் பெற்றவர்கள். வெற்றியின் அடையாளமாக இருக்கும் இவர்கள், செல்லும் இடத்தில் வெற்றிகளை குவிக்கும் தன்மை கொண்டவர்கள். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பார்த்த வெற்றிகளை காண்பதோடு, தன்னை சார்ந்து உள்ளவர்களின் வெற்றிகளையும் உறுதி செய்கின்றனர். 

பெரும்பாலும் நிதானமாக செயல்பட்டு, இலக்கை அடையும் குணம் கொண்ட இவர்கள், திருமண வாழ்க்கையில் சிறப்பான திருப்பங்களை கொண்டு வருகின்றனர். தனது வாழ்க்கை துணையின் வெற்றிக்கு பின் ஊக்க சக்தியாக இருக்கும் அதேநேரம், தனது மாமியாரின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும் உதவி செய்கின்றனர். 

தனது வெற்றிகள் மூலம் மற்றவர்களின் வெற்றிகளை உறுதி செய்யும் துலாம் ராசியினர், உண்மையில் தங்கள் குடும்ப உறவுகளுக்கு கிடைத்த அதிர்ஷ்ட அறிகுறி என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்! 

மகரம் 

​மகர ராசியினர் தங்களின் பொறுப்புணர்வுக்கு பெயர் பெற்றவர்கள். கையில் எடுக்கும் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க தேவையான முயற்சிகளை அளிக்க கூடியவர்கள். கடுமையான உழைப்பாளிகள், விடா முயற்சிக்கும் பெயர் பெற்றவர்கள். தங்கள் கடமையுணர்வின் காரணமாக தான் எடுக்கும் பணிகளில் வெற்றி காண்பதோடு, தன்னை சார்ந்து உள்ளவர்களின் வெற்றிக்கும் உதவி செய்கின்றனர். 

கர்ம வினைகளின் அடிப்படையில் தனித்துவமான பலன்களை அளிக்கும் சனி கிரகத்தை ஆளும் அதிபதியாக கொண்ட மகர ராசியினர், சனி கிரகத்தின் ராஜதந்திரங்களை கொண்டவர்கள். தங்கள் ராஜதந்திரங்களை வேண்டும் இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தெளிவாக அறிந்தவர்கள். சனி கிரகம் பெரும்பாலும் எதிர்மறை ஆற்றலின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. 

ஆனால், வேத ஜோதிட நிபுணர்கள் கூற்றுப்படி சனி கிரகமானது உங்கள் கர்ம வினைகளுக்கு ஏற்ப நற்பலன் மற்றும் கெடுபலன் என இரண்டையும் நிகராக அளிக்கிறது. சனியின் தாக்கத்தை தன்னுள் கொண்டிருக்கும் மகர ராசி ஆண்களும், தங்கள் மாமியாரின் வாழ்க்கையில் அத்தகைய கலவையான பலன்களை கொண்டு வருகின்றனர்! 

பொதுவான பண்புகள் 

குறிப்பிடப்பட்ட இந்த நான்கு ராசிகளும் (கடகம், ரிஷபம், துலாம் மற்றும் மகரம்) ஒரு பொதுவான புள்ளியில் இணைகின்றன. ஆம், தன் மாமியாரின் நலன் காக்கும் அந்த ஒரு விஷயத்தில் இந்த 4 ராசிக்காரர்களும் ஒன்றாக இணைகின்றனர். குறித்த இந்த 4 ராசியினரும், நிலைத்தன்மை கொண்டவர்கள் - நிலையான வெற்றியை தேடி செல்பவர்கள். 

நல்லிணக்கத்தை காக்க முயற்சிப்பவர்கள்; பெரியவர்களுக்கு மதிப்பு அளிப்பவர்கள். அந்த வரிசையில் வயதில் மூத்த தனது மாமியாருக்கு மதிப்பும், மரியாதையும் அளிப்பதோடு - அவரின் நற்பெயரை காக்கும் விஷயங்களிலும் கவனம் செலுத்துகின்றனர். மேலும், தங்கள் குடும்ப உறவுகளின் நலன் காக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவதோடு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக - உணர்வுப்பூர்வமான ஆதரவையும் அளிக்கின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
இரணைமடு நீர்த்தேக்கத்தின் 106 ஆவது ஆண்டு பொங்கல் நிகழ்வு

இரணைமடு நீர்த்தேக்கத்தின் 106 ஆவது ஆண்டு பொங்கல் நிகழ்வு

இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்...

இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்...

பிரஜா சக்திக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை!

பிரஜா சக்திக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை!

ஜெயபிரேம் கார்டனில் மகாகவி பாரதிக்கு சிலை திறப்பு!

ஜெயபிரேம் கார்டனில் மகாகவி பாரதிக்கு சிலை திறப்பு!

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டம்!

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டம்!

இளங்குமரன் எம்.பியை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

இளங்குமரன் எம்.பியை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

பட்டிப்பொங்கல்

பட்டிப்பொங்கல்

நயினாதீவு நாக விகாரைக்கு சென்ற ஜனாதிபதி

நயினாதீவு நாக விகாரைக்கு சென்ற ஜனாதிபதி

சர்வதேசத்தின் கரிசனையே எமது இறுதி நம்பிக்கை!

சர்வதேசத்தின் கரிசனையே எமது இறுதி நம்பிக்கை!

அரசியல் இலாபத்திற்காகப் போலிப் போராட்டம்

அரசியல் இலாபத்திற்காகப் போலிப் போராட்டம்


ஸ்ஷோட்ஸ்
இரணைமடு நீர்த்தேக்கத்தின் 106 ஆவது ஆண்டு பொங்கல் நிகழ்வு!

இரணைமடு நீர்த்தேக்கத்தின் 106 ஆவது ஆண்டு பொங்கல் நிகழ்வு!

நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு!

நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு!

பிரஜா சக்திக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை!

பிரஜா சக்திக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை!

கொட்டகலை ஜெயபிரேம் கார்டன் கிராமத்தில் மகாகவி பாரதிக்கு சிலை திறப்பு

கொட்டகலை ஜெயபிரேம் கார்டன் கிராமத்தில் மகாகவி பாரதிக்கு சிலை திறப்பு

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டம்!

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டம்!

மட்டக்களப்பில் பட்டிப்பொங்கல்

மட்டக்களப்பில் பட்டிப்பொங்கல்

நயினாதீவு நாக விகாரைக்கு சென்ற ஜனாதிபதி

நயினாதீவு நாக விகாரைக்கு சென்ற ஜனாதிபதி

யாழில் நடைபயிற்சியில் ஈடுப்பட்ட ஜனாதிபதி!

யாழில் நடைபயிற்சியில் ஈடுப்பட்ட ஜனாதிபதி!

சர்வதேசத்தின் கரிசனையே எமது இறுதி நம்பிக்கை!

சர்வதேசத்தின் கரிசனையே எமது இறுதி நம்பிக்கை!

சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு - பொலிஸார் விசாரணை!

சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு - பொலிஸார் விசாரணை!