விளையாட்டு
இலங்கை - மே.இ.தீவுகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

Oct 20, 2024 - 07:13 AM -

0

இலங்கை - மே.இ.தீவுகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று கண்டி-பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகிறது.

 

இலங்கை நேரப்படி குறித்த போட்டியானது பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

 

முன்னதாக இடம்பெற்ற T20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ள நிலையில், ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மறுமுனையில் மேற்கிந்திய தீவுகள் அணியும் பலமான துடுப்பாட்ட வரிசைகளை கொண்டிருப்பதால், ஒருநாள் தொடரில் இலங்கைக்கு பாரிய நெருக்கடியை வழங்கும் என கிரிக்கட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

 

இதேவேளை, சரித் அசலங்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஒருநாள் அணியில், இறுதியாக இந்திய ஒருநாள் தொடரில் பங்கேற்ற வீரர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.  

 

இலங்கை ஒருநாள் அணி விபரம்

 

சரித் அசலன்க (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லாலகே, வனிந்து ஹஸரங்க, ஜெப்ரி வன்டர்செய், மகீஷ் தீக்ஸன, ஜெப்ரி வன்டர்செய், சமிந்து விக்ரமசிங்க, அசித பெர்னாண்டோ, டில்சான் மதுசங்க, மொஹமட் சிராஸ் 
 

Comments
0

MOST READ
01
02
03
04
05