Oct 20, 2024 - 12:29 PM -
0
இந்திய அணிக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய 5ஆம் நாளில் 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
முன்னதாக இந்திய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 46 ஓட்டங்களையும் நியூசிலாந்து அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 402 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், 356 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி நேற்றைய நான்காம் நாளில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 462 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
107 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
அதற்கமைய, 36 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்து அணி இந்தியாவில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.