Oct 28, 2024 - 06:50 PM -
0
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் கெரி கேர்ஸ்டன், உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கும், கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளமையே இதற்கு காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2024 ஏப்ரல் மாத்தில் இருந்து 2 வருடங்களுக்கு பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக கேர்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.
எனினும், தற்போது அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில், அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள ஜேசன் கில்லெஸ்பி குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.