விளையாட்டு
இங்கிலாந்து - மே.இ.தீவுகள் ஒருநாள் போட்டி இன்று

Oct 31, 2024 - 06:52 AM -

0

இங்கிலாந்து - மே.இ.தீவுகள் ஒருநாள் போட்டி இன்று

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து T20 போட்டிகளும் நடைபெற உள்ளன.


இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது ஆன்டிகுவாவில் இலங்கை நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது .


ஷாய் ஹோப் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக செயல்பட உள்ளார். ஜோஸ் பட்லர் காயத்தில் இருந்து மீளாததால் லியாம் லிவிங்ஸ்டன் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05