விளையாட்டு
இலங்கை அணிக்கு 210 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Nov 17, 2024 - 07:20 PM -

0

இலங்கை அணிக்கு 210 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பல்லேகலை மைதானத்தில் 2ஆவது ஒருநாள் போட்டி இடம்பெற்று வருகிறது.


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.


எனினும், பல்வேறு சந்தர்ப்பங்களில் மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

 

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்த 209 ஓட்டங்களை்ப பெற்றுக்கொண்டது.


அவ்வணி சார்பாக Mark Chapman 76 ஓட்டங்களையும் Mitchell Hay 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


இலங்கை அணியின் பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஷன மற்றும் ஜெப்ரி வெண்டர்சே தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.


போட்டியில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணி 210 ஓட்டங்கள் பெறவேண்டும்.

Comments
0

MOST READ