Header Logo

சினிமா
'மதகஜராஜா' படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு

Jan 13, 2025 - 09:44 PM -

0

'மதகஜராஜா' படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு உருவான படம் 'மதகஜராஜா'. இதில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். சுமார் 12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இப்படம், நேற்று வெளியானது.

நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மதகஜராஜா வெற்றிக்கு வாழ்த்துகள் மச்சி. இப்படம் சிரிப்பு சரவெடியாக இருப்பதாக பலரும் கூறுவதைக் கேட்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
Comments
0

MOST READ

காணொளி
இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

title