May 23, 2025 - 01:42 PM -
0
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ஓட்டங்களை கடந்த 5வது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜில் சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 28-வது ஓட்டத்தை எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார்.
ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ஓட்டங்களை கடந்துள்ளார். 36 சதங்கள் மற்றும் 65 அரை சதங்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை வேகமாக எட்டிய சாதனை படைத்துள்ளார் ஜோ ரூட். இவர் 153 போட்டிகளில் 13 ஆயிரம் ஓட்டங்களை எடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 159 போட்டிகளிலும், இந்தியாவின் ராகுல் டிராவிட் 160 போட்டிகளிலும், அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் 162 போட்டிகளிலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 163 போட்டிகளிலும் எடுத்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
அவர் 200 போட்டிகளில் 15,921 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவருக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் 168 போட்டிகளில் 13,378 ஓட்டங்களும், ஜாக் காலிஸ் 166 போட்டிகளில் 13,289 ஓட்டங்களும், ராகுல் டிராவிட் 164 போட்டிகளில் 13,288 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்