May 23, 2025 - 06:01 PM -
0
கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் புதிய எரிசக்தி வாகனங்களுக்கான மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக, பன்முக வர்த்தக நாம மின்சார இயக்க தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற எவல்யூஷன் ஆட்டோ [Evolution Auto] நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஒத்துழைப்பிற்கிணங்க 2025 ஆம் ஆண்டு இறுதி வரை எவல்யூஷன் ஆட்டோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான விசேட லீசிங் ஜகுத்தகைஸ தெரிவுகள் மற்றும் சலுகைகளை வழங்க வங்கி உறுதியளித்துள்ளது. இந்த சலுகையானது எவல்யூஷன் ஆட்டோவால் விற்பனை செய்யப்படும் அனைத்து இலத்திரனியல் வாகனங்களுக்கும் பொருத்தமானதாகும். மேலும், இந்த மூலோபாய பங்குடைமையின் கீழ் கொமர்ஷல் வங்கி மூலம் குத்தகைக்கு விடப்படும் வாகனங்களுக்கு ரூ.1.5 மில்லியன் வரை விலைக்கழிவு வழங்கப்படுமென எவல்யூஷன் ஆட்டோ உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள், எவல்யூஷன் ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட்டின் அனைத்து இலத்திரனியல் பயணிகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் வரிசையை உள்ளடக்கியது, இதில் KYC V7, KYC V5, Riddara AIR,Riddara Pro, Radar Horizon Pro, Riddara Horizon Pro மற்றும் AVATR 11 ஆகியவை அடங்கும்.
குறைந்த வட்டி விகிதங்கள், தனிப்பயனாக்கப்பட்ட கட்டணத் திட்டங்கள் மற்றும் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பதன் மூலம் கவர்ச்சிகரமான லீசிங் வாடகைகள் சாத்தியமாவதுடன் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து லீசிங்குகளையும் பசுமை குத்தகைகளாகக் கருதுவதற்கு கொமர்ஷல் வங்கி இசைந்துள்ளது. இது அந்த வகையில் வழங்கப்படும் சலுகைகளுக்கு அவற்றை தகுதியுடையவையாக மாற்றுகிறது. கொமர்ஷல் வங்கியானது வங்கியின் சூப்பர் லீசிங் திட்டத்தின் கீழ், ஏழு வருட லீசிங்கிற்கு, ஒவ்வொரு ரூ.100,000 க்கும் ரூ.1,598.00 என்ற மிகக் குறைந்த வாடகையை வழங்குகிறது.
கொமர்ஷல் வங்கியின் லீசிங் வாடிக்கையாளர்கள், வங்கியின் சூப்பர் லீசிங் மற்றும் ஹைப்ரிட் லீசிங் வசதிகள் மூலம், தனிப்பட்ட வருமான முறைகளுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட லீசிங் வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.இதில் Mahindra Treo, Ather இலத்திரனியல் ஸ்கூட்டர்கள் மற்றும் Revolt இலத்திரனியல் பைக்குகள் உள்ளிட்ட வர்த்தக நாமங்கள் அடங்குகின்றன.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.