உலகம்
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 50% மேலதிக வரி - ட்ரம்ப் அறிவிப்பு

May 24, 2025 - 11:07 AM -

0

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 50% மேலதிக வரி - ட்ரம்ப் அறிவிப்பு

ஜூன் 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் மேலதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். 

ட்ரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஜேர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும். 

முன்னதாக "இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்" என ஆப்பிள் நிறுவனத்தை ட்ரம்ப் மிரட்டியமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05