May 24, 2025 - 12:34 PM -
0
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 6-4, 6-7 (6-8), 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆப்னரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், ஹர்காக்ஸ் ஆகியோர் மோதுகின்றனர்.