மலையகம்
மக்கள் எங்களுக்கு வழங்கிய அதிகாரத்திற்கு அமைய செயல்படுவோம்

Jun 3, 2025 - 04:42 PM -

0

மக்கள் எங்களுக்கு வழங்கிய அதிகாரத்திற்கு அமைய செயல்படுவோம்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிரிக்கெட் மட்டை சின்னத்தின் கீழ் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்டு நுவரெலியா மாநகர சபையில் மூன்று போனஸ் ஆசனங்களையும், நுவரெலியா பிரதேச சபையில் இரண்டு போனஸ் ஆசனங்களையும் வென்ற சமூக சேவகர் அஜித் குமார தலைமையிலான சுயேச்சைக் குழுவிற்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (03) நுவரெலியாவில் நடைபெற்றது.

 

நுவரெலியா மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினர்களாக அஹகம ராமநாயக்கலக் அஜித் குமார, மாகந்துரே இரத்தினவன்ச தேரர் மற்றும் ஐரீன் நிர்மலி ஃபாடினன்ஸ் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அதேவேளை, பெருமாள் ரவிச்சந்திரன் ஏ.கே.ஜி.ஆர். அபேசிங்க நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

 

பதவியேற்புக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய சுயேச்சைக் குழுத் தலைவர் அஜித் குமார, அதிகாரத்தை அமைப்பது தொடர்பான முடிவு இன்னும் விவாத நிலையிலேயே உள்ளது என்றார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

 

எங்களுக்கு அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் தாங்கள் வேலை செய்வோம். கடந்த ஆண்டுகளில் மக்களுக்கு நாங்கள் செய்த சேவைக்காக மக்கள் இந்த ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

 

மக்கள் வழங்கிய ஆணையின் சக்தியுடன், வரும் ஆண்டுகளில் மக்களுக்கு சேவை செய்ய நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05