வணிகம்
SUNGROW வலு களஞ்சியப்படுத்தல் கட்டமைப்புகளை அறிமுகம் செய்து E. B. Creasy Solar உடனான தனது பங்காண்மையை தொடர்வை உறுதி செய்துள்ளது

Jun 5, 2025 - 03:36 PM -

0

 SUNGROW வலு களஞ்சியப்படுத்தல் கட்டமைப்புகளை அறிமுகம் செய்து E. B. Creasy Solar உடனான தனது பங்காண்மையை தொடர்வை உறுதி செய்துள்ளது

சூரிய வலுப் பிறப்பாக்கத்தில் சர்வதேச முன்னோடியாகத் திகழும் SUNGROW, E.B. Creasy & Co., PLC இன் புதுப்பிக்கத்தக்க வலுப் பிரிவான E.B. Creasy Solar உடன் கைகோர்த்துள்ள நிலையில், உள்நாட்டு சந்தையில் SUNGROW வலுக் களஞ்சியப்படுத்தல் கட்டமைப்புகளை அறிமுகம் செய்திருந்ததை அண்மையில் கொண்டாடியது. 

இந்நிகழ்வு, 2025 மே 28 ஆம் திகதி, சினமன் லைஃப் – சிட்டி ஒஃவ் ட்ரீம்ஸ் இல் நடைபெற்றதுடன், அதிகரித்துச் செல்லும் வலு சுதந்திரம் மற்றும் சிக்கனத்தை நிவர்த்தி செய்யும் வகையில், புத்தாக்கமான, தங்கியிருக்கக்கூடிய மற்றும் நிலைபேறான வலுத் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் நேரத்தியான நகர்வை முன்னெடுப்பதை கொண்டாடியிருந்தது. 

இல்லங்கள் மற்றும் வணிக பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வலு களஞ்சியப்படுத்தல் கட்டமைப்புகளை அணுகுவதற்கு வசதியளிக்கும் வகையில் இந்தப் பங்காண்மை அமைந்துள்ளதுடன், புதுப்பிக்கத்தக்க வலுவினால் வலுவூட்டப்பட்ட எதிர்காலத்தை நோக்கி இலங்கை பயணிப்பதை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05