கிழக்கு
உணவுப் பாதுகாப்புத் தினத்தினை முன்னிட்டு சோதனை நடவடிக்கை

Jun 5, 2025 - 04:26 PM -

0

உணவுப் பாதுகாப்புத் தினத்தினை முன்னிட்டு சோதனை நடவடிக்கை

ஜுன் - 7 உலக உணவுப் பாதுகாப்புத் தினத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் பல இன்று (05) அதிரடி பரிசோதனை செய்யப்பட்டது.

 

இப்பரிசோதனை நடவடிக்கையானது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல் .எம். ஜெரீன் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

 

இதன் போது உணவுப் பொருட்களின் தரம், பராமரிப்பு நிலை, சமையலறையின் சுகாதாரம், உணவு செய்முறை முறைகள் மற்றும் வேலை செய்பவர்களின் மருத்துவச் சான்றிதழ்கள் போன்றன கண்காணிக்கப்பட்டன. 

 

மேலும் உணவு கையாளும் மூன்று  நிறுவனங்களில்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நிறக் குறியீடுகள் இல்லாத உணவுகள்,  முறையாக பொதி செய்யப்படாத உணவுகள், மருத்துவ சான்றிதழ் இல்லாது உணவு கையாளும் நபர்கள், போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டு உணவுகள் கைப்பற்றப்பட்டன.

 

இத தவிர  உணவக உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு என்பது பொதுமக்களின் உடல் நலத்துடன்  நேரடியாக தொடர்புடையதாகும்.

 

உணவகங்களின் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காதவர்களின் மீது இனி வரும் காலங்களில்  கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சாய்ந்தமரது காதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்தார்.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05