Jun 6, 2025 - 01:58 PM -
0
கொமர்ஷல் வங்கியானது த ஏசியன் பேங்கர் (TAB) சஞ்சிகையால் இரு விருதுகளை பெற்றுள்ளது. இதற்கிணங்க கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்பட்ட வங்கி என்று இந்த சஞ்சிகையால் பெயரிடப்பட்டதுடன் மற்றும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான திரு. சனத் மனதுங்க சிறந்த வங்கி பிரதம நிறைவேற்றதிகாரி என பெயரிடப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இரண்டு மதிப்புமிக்க விருதுகளை வங்கியுடன் அதன் பிரதம நிறைவேற்றதிகாரியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022-2024 காலகட்டத்திற்கான இந்த விருதுகள், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற TAB குளோபல் தலைமைத்துவ சாதனை விருதுகள் விழா மற்றும் இரவு விருந்துபசார நிகழ்வில் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வானது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நிதியியல் சேவைத் துறையில் பணியாற்றும் நிபுணர்களின் மிகப் பெரிய வருடாந்தக் கூட்டமான 2025 ஆம் ஆண்டு ஆசிய வங்கியாளர் உச்சி மாநாட்டின் (The Asian Banker Summit) பதிப்புடன் இணைந்ததாக நடத்தப்பட்டது.
சிறந்த வங்கி பிரதம நிறைவேற்றதிகாரி விருதானது, நிலையற்ற தன்மை நிறைந்த காலகட்டத்தில் கொமர்ஷல் வங்கி குறிப்பிடத்தக்க பாரிய பொருளாதார சவால்களை எதிர்கொண்ட நிலையில் இலங்கையில் மிகவும் வலுவான, மிகவும் நிலையான மற்றும் மிகவும் நம்பகமான நிதியியல் நிறுவனமாக அதன் நிலையை வலுப்படுத்தும் வகையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட திரு. மனதுங்கவின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது.
திரு. சனத் மனதுங்க, 2022-2024 காலப்பகுதி முழுவதும், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார, நிதி மற்றும் செயல்பாட்டு சவால்களின் மத்தியில் வங்கியை வழிநடத்துவதில் இணையற்ற துணிச்சலையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். அவரது துணிச்சலான மூலோபாய முடிவுகள், டிஜிட்டல் புத்தாக்கங்களுக்கான அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர் மைய அணுகுமுறை மற்றும் நிலைத்தன்மை ஆகியவை இலங்கையில் வலுவான மற்றும் மிகவும் மீள்தன்மை கொண்ட நிதியியல் நிறுவனமாக கொமர்ஷல் வங்கியின் நிலையை உறுதிப்படுத்தின, என்று வங்கி தெரிவித்துள்ளது.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் தலைமைத்துவம் இலங்கையின் வங்கியியல் நிலப்பரப்பை மறுவரையறை செய்துள்ளதுடன் கொமர்ஷல் வங்கியை மீள்எழுச்சி, புத்தாக்கம் மற்றும் நிலையான வங்கியியல் ஆகியவற்றில் உலகளாவிய அளவுகோலாக மாற்றியுள்ளது.
இந்த விருதுகளுக்காக மதிப்பிடப்பட்ட காலகட்டத்தின் பல சிறப்பம்சங்களில், மூலதன போதுமைதன்மை மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக உரிமைபங்குகள் வெளியீடு மற்றும் கடன் பத்திர வெளியீடுகள் மூலம் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக நாட்டின் SME துறையின் மிகப்பாரிய கடன் வழங்குனர் ரூ.22.54 பில்லியன் மற்றும் ரூ.20 பில்லியன் மூலதன உட்செலுத்துதல்கள் வழங்குநராக தரவரிசைப்படுத்தப்பட்டமை விநியோகச் சங்கிலி இணைப்பு மற்றும் சந்தை அணுகலை வலுப்படுத்த கொமர்ஷல் வங்கி LEAP GlobalLinker குளோபல்லிங்கர் என்ற விரிவான SME வர்த்தக சுற்றுச்சூழல் முறைமையை அறிமுகப்படுத்தியமை பெருநிறுவன செயல்திறனை அதிகரிக்க ComBank Digital நிறுவன தீர்வுகளின் கீழ் Host-to-Host (H2H) கட்டண சேவைகளை அறிமுகப்படுத்தியமை ComBank Digital தளம் 1.5 மில்லியன் பயனர்களை கடந்து, ஒரு வருடத்தில் ரூ.4 டிரில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயலாக்கியமை மற்றும் வங்கியின் சுற்றுச்சூழல் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் 100,000 மரங்களை நடுவதை நிறைவு செய்தல் ஆகியவை வங்கியின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் அடங்கும்.
கொமர்ஷல் வங்கியின் நிலையை உறுதிப்படுத்தும் வகையில் சொத்துக்கள், கடன்கள் மற்றும் வைப்புத்தொகைகள் மூலம் இலங்கையின் மிகப்பாரிய தனியார் துறை வங்கியாகவும், சொத்துக்கள் மற்றும் வைப்புத்தொகைகளில் ரூ.2 டிரில்லியனையும் கடன்களில் ரூ.1 டிரில்லியனையும் கடந்த முதலாவது தனியார் துறை வங்கியாகவும், 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 38.07% ஆக இருக்கும் தொழில்துறையில் முன்னணி CASA விகிதத்தைக் கொண்ட வங்கி போன்ற பல குறிப்பிடத்தக்க மைல்கற்கள் அடையப்பட்டன.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.