Jun 8, 2025 - 06:01 PM -
0
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து ஜனாதிபதி ட்ரம்ப் நாடுகடத்தி வருகிறார். அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலிபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூஸ்கம் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸின் மேயர் கரேன் பாஸால் தங்கள் வேலைகளைச் செய்ய முடியாவிட்டால், அது எங்களுக்கு தெரியாது. நாங்கள் தலையிட்டு பிரச்னையைத் தீர்ப்போம். கலவரங்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு அவர்கள் வழியில் பதிலடி கொடுப்போம். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.