வணிகம்
Daraz Sri Lanka வழங்கும் பாரிய தள்ளுபடிகள் மற்றும் பாரிய வெகுமதிகளுடன் 6.6 இடை ஆண்டு (6.6 Mid-Year Sale) துரும்புச்சீட்டாக மாபெரும் விற்பனை

Jun 9, 2025 - 09:06 AM -

0

Daraz Sri Lanka வழங்கும் பாரிய தள்ளுபடிகள் மற்றும் பாரிய வெகுமதிகளுடன் 6.6 இடை ஆண்டு (6.6 Mid-Year Sale) துரும்புச்சீட்டாக மாபெரும் விற்பனை

நாடெங்கிலுமுள்ள இணையவழி (ஒன்லைன்) கொள்வனவாளர்களுக்கு மாபெரும் வாய்ப்பினை வழங்கும் முகமாக, பாரிய தள்ளுபடிகள், இலவச விநியோகம், மற்றும் ரூபா 20 மில்லியன் பெறுமதிக்கும் மேற்பட்ட வவுச்சர்களுடன் தனது 6.6 இடை ஆண்டு துரும்புச்சீட்டு விற்பனையை ஜுன் 6 முதல் ஜுன் 10 வரை Daraz Sri Lanka வழங்கி வருகின்றது. சீட்டாட்டத்தின் போது திருப்புமுனையாக அமையும் துரும்புச்சீட்டு என்பது பொதுவாக அனேகமான இலங்கை மக்கள் மத்தியில் பரிச்சயம் என்பதால் அதனை கருப்பொருளாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஊக்குவிப்புப் பிரச்சாரம், ஒப்பற்ற மதிப்பு, சௌகரியம் மற்றும் ஆச்சரியங்களை வழங்குகின்ற ஒரு தளமாக Daraz விளங்குவதை எடுத்துக்காட்டுகின்றது. 

இலத்திரனியல் சாதனங்கள், நவநாகரிகம், அழகு பராமரிப்பு, வீட்டு மற்றும் வாழ்வுக்கான பொருட்கள், பலசரக்குகள் மற்றும் பல முக்கியமான பிரிவுகள் மத்தியில் 85% வரையான விலைக்கழிவுகளுடன் மிகச் சிறந்த ஒன்லைன் விற்பனை விருந்தை கொள்வனவாளர்கள் ஐந்து தினங்களாக அனுபவிக்கின்றனர். தினந்தோறும் புதுப்பிக்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நேர வரம்பினுள் கிடைக்கும் Mega Deals மற்றும் Hot Deals சலுகைகளும் இந்த ஊக்குவிப்பின் அங்கமாகவுள்ளதுடன், ஒவ்வொரு கொள்வனவின் போதும் மதிப்பை இன்னும் அதிகரிக்கச் செய்யும் வகையில் பிரத்தியேகமான செயலி (app) வவுச்சர்கள் மற்றும் இலவச விநியோக சலுகைகளும் கிடைக்கின்றன. Diamond Best Food, Unilever, Hemas, Janet, Sunshine Healthcare, Amante மற்றும் V-TEC Furniture உள்ளிட்ட முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்கள் இவ்விற்பனையின் கீழ் கிடைக்கவுள்ளதுடன், பிரத்தியேகமான திட்டங்கள் மற்றும் தயாரிப்பு அறிமுகங்களும் கிடைக்கப்பெறுகின்றன. அத்துடன் கொமர்ஷல் வங்கி, DFCC வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி - அமெக்ஸ் (AmEx), NDB வங்கி, சம்பத் வங்கி, யூனியன் வங்கி மற்றும் Daraz Pay-later வலுவூட்டப்பட்ட KOKO ஆகிய முக்கிய கொடுப்பனவுக் கூட்டாளர்கள் கூடுதல் சேமிப்புக்கள் மற்றும் தவணைக்கொடுப்பனவுத் திட்டங்களை வழங்கும் அதேசமயம், ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன நேரடியாகவும், call & convert வழிமுறையிலும் 36 மாதங்கள் வரையான தவணைக்கொடுப்பனவுத் திட்டங்களை வழங்குகின்றன. 

இந்த ஊக்குவிப்புப் பிரச்சாரம் குறித்து Daraz Sri Lanka முகாமைத்துவப் பணிப்பாளர் எஹ்சான் சாயா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஆண்டின் 6.6 இடை ஆண்டு விற்பனை ஊக்குவிப்பு மூலமாக, ஒப்பற்ற மதிப்பை வழங்கும் பிரச்சாரமொன்றை வழங்குவது மாத்திரமன்றி, தமக்குப் பரிச்சயமான வழியில் இலங்கை கொள்வனவாளர்களை அதனுடன் இணைக்கும் வழிமுறையையும் பின்பற்ற விரும்பினோம். சீட்டாட்டமொன்றின் போக்கினை துரும்புச்சீட்டு எவ்வாறு மாற்றியமைக்கும் வல்லமை படைத்ததோ, ஒன்லைன் கொள்வனவின் ஆட்டத்தை மாற்றியமைக்கும் வல்லமை படைத்த Daraz, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகள், சிறப்பான சேவை, மற்றும் தமக்குப் பிரியமான வர்த்தகநாமங்களுக்கான சிறப்பான அணுகல் ஆகியவற்றை வழங்குகின்றது,” என்று குறிப்பிட்டார். 

6.6 அனுபவத்தின் மையமாக Daraz app அமைந்துள்ளதுடன், இப்பிரச்சாரம் இடம்பெறும் காலப்பகுதியில் 666 and Golden Hour Deals, voucher drops, Category of the Day, 6.6 Tricks மற்றும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புத் தெரிவுகள் போன்ற பிரத்தியேக சலுகைகளை வழங்கும். அதிநவீன Nothing 3(A) கைத்தெலைபேசி மற்றும் IMAX வழங்கும் 3 புத்தம்புதிய தொலைக்காட்சி சாதனங்கள் ஆகியவற்றின் பிரத்தியேக அறிமுகத்தையும் இப்பிரச்சாரம் உள்ளடக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தமது வீடுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்பினாலும் சரி, தமது அலுமாரிகளை புதிய ஆடையணிகளால் நிரப்பிக் கொள்ள விரும்பினாலும் சரி, அல்லது அன்றாட அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள விரும்பினாலும் சரி, திறன்மிக்க, இடைவிடாத, மற்றும் வெகுமதியளிக்கும் கொள்வனவு அனுபவத்தை Daraz வழங்குகின்றது. 

இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய மின்-வர்த்தக (e-commerce) தளம் என்ற வகையில், உள்நாட்டில் எதிரொலிக்கும், டிஜிட்டல்ரீதியாக முன்னெடுக்கப்படும், மற்றும் மதிப்பை இலக்காகக் கொண்ட ஊக்குவிப்புப் பிரச்சாரங்களை Daraz தொடர்ந்தும் தோற்றுவித்து வருவதுடன், 6.6 இடை ஆண்டு விற்பனை மூலமாக சொல்லப்படும் செய்தி மிகத் தெளிவானது: ஒன்லைன் கொள்வனவின் துரும்புச்சீட்டு Daraz ஆகும். 

Daraz குழுமம் குறித்த விபரங்கள் 

2015 ல் ஸ்தாபிக்கப்பட்ட Daraz, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் முன்னிலை வகிக்கும் e-commerce தளமாகத் திகழ்ந்து வருகின்றது. 500 மில்லியன் சனத்தொகையுடன், மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற பிராந்தியத்தை இலக்கு வைத்து, அதிநவீன சந்தைப்பரப்பு தொழில்நுட்பத்துடன், விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் என இரு தரப்பினருக்கும் வலுவூட்டுகின்றது. e-commerce, விநியோக வழங்கல் ஏற்பாடு, கொடுப்பனவு மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்பி, ஈர்க்கின்ற, தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட கொள்வனவு அனுபவத்தை வழங்கி, வர்த்தகத்தின் ஆற்றல் மூலமாக தெற்காசிய சமூகங்களை மேம்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கம். 

மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள தயவு செய்து www.daraz.com என்ற இணையத்தளத்தை நாடுங்கள் அல்லது நிறுவனம் குறித்த தகவல் விபரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள LinkedIn (www.linkedin.com/company/daraz/) மூலமாக Daraz உடன் இணைப்பில் இருங்கள்.

Comments
0

MOST READ