இந்தியா
குழந்தையின் சடலத்தை கவ்விச் சென்ற நாய்

Jun 9, 2025 - 10:34 AM -

0

குழந்தையின் சடலத்தை கவ்விச் சென்ற நாய்

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அரச வைத்தியசாலையில், பிறந்த ஒரு குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 06 ஆம் திகதி வைத்தியசாலை கழிப்பறை அருகே ஒரு நாய் குழந்தையின் சடலத்தை கவ்விக்கொண்டு சென்றதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டார். மீட்கும்போது குழந்தையின் உடல் பகுதியளவு சிதைந்திருந்தது.

 

சிசிடிவி காட்சிகளின்படி, 17 வயது பெண் ஒருவர் கழிப்பறையில் பிரசவித்துவிட்டு, பின்னர் ஒரு நபருடன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

 

வைத்தியசாலையின் திறந்திருந்த வாயில்கள் வழியாக நாய்கள் உள்ளே நுழைந்ததாகத் தெரிகிறது. இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05