Jun 9, 2025 - 11:41 AM -
0
உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்கி உள்ளது. இந்நிலையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மருக்கு (வயது 33) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சாண்டோஸ் கிளப் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக சக வீரர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி வைத்தியர்களின் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இவருக்கு கொரோனா தொற்று ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். அவருக்கு இதற்கு முன்பு கடந்த 2021ஆம் ஆண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.