விளையாட்டு
IPL 2026 இல் RCB அணிக்கு தடை?

Jun 9, 2025 - 02:57 PM -

0

IPL 2026 இல் RCB அணிக்கு தடை?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கிண்ணத்தை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் பொலிஸாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

 

11 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 

ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணியை தடை செய்வது ஒன்றும் புதிதல்ல. மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05