Jun 9, 2025 - 05:12 PM -
0
மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேராக் மாநிலத்தில் இருக்கும் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் குறித்த பேருந்தில் பயணித்தாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்து இன்று (09) இடம்பெற்றுள்ளது.
பேராக் மாநிலத்தையும் கிளந்தான் மாநிலத்தையும் இணைக்கும் கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.