உலகம்
நாய்களை வீதிகளில் அழைத்துச் செல்ல தடை

Jun 9, 2025 - 09:50 PM -

0

நாய்களை வீதிகளில் அழைத்துச் செல்ல தடை

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் நாய்களை பொது இடங்களில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்தத் தடை, 2019 இல் தெஹ்ரானில் விதிக்கப்பட்ட பொலிஸ் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, கடந்த வாரத்தில் மேலும் 18 முக்கிய நகரங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தடையின் கீழ், நாய்களை வாகனங்களில் பயணிக்கச் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. 

1979 இல் ஆட்சிக்கு வந்த ஈரானிய புரட்சிகர அரசாங்கம், நாய் வளர்ப்பை கண்டித்துள்ள நிலையில், மேலும் நாய்கள் அசுத்தமானதாக கருதப்பட்டன. 

நாய் வளர்ப்பு மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் அரசாங்கம் கூறியது.

Comments
0

MOST READ
01
02
03
04
05