Jun 10, 2025 - 10:29 AM -
0
இந்த வருட ஐசிசியின் Hall of fame இல் தோனி, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லா மற்றும் கிரேம் ஸ்மித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக நேற்று (09) ICC அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) Hall of fame கௌரவத்தைப் பெறும் 11 ஆவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோர் 2009 ஆம் ஆண்டு இந்த மரியாதையைப் பெற்ற முதல் இந்தியர்கள் ஆவர். இந்த அறிவிப்பு தோனியின் 44 ஆவது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வந்துள்ளது மேலும் சிறப்பு பெறுகிறது.