செய்திகள்
கீதா கோபிநாத் இலங்கை விஜயம்

Jun 10, 2025 - 11:37 AM -

0

கீதா கோபிநாத் இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

 

இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ள இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த விஜயத்தின் போது, கீதா கோபிநாத் இலங்கை அரசாங்க அதிகாரிகள், மத்திய வங்கி ஆளுநர், மற்றும் பிற பங்குதாரர்களுடன் சந்திப்பு நடத்தி, IMF இன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (Extended Credit Facility) மற்றும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கலாநிதி கீதா கோபிநாத், 2022 ஜனவரி 21 முதல் IMF இன் முதல் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். 

இதற்கு முன்னர், 2019 முதல் 2022 வரை IMF இன் தலைமை பொருளியலாளராக பணியாற்றினார்.
Comments
0

MOST READ
01
02
03
04
05