சினிமா
நான் கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பேன்

Jun 10, 2025 - 03:17 PM -

0

நான் கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பேன்

தமிழ் சினிமா ரசிகர்கள் படங்களை எப்படி ரசிக்கிறார்களோ அதைத்தாண்டி பட பாடல்களை ரசிப்பார்கள்.

 

இதனாலேயே பாடலில் ஒரு பிட்டை மட்டும் மாஸ் நடனத்துடன் அமைத்து அதையே புரொமோஷனுக்காக பயன்படுத்தி படங்களில் வெளியிடுகிறார்கள். அப்படி சமீபத்தில் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடல் பாட அது செம ஹிட்டானது.

 

சின்மயி பாடியதை கேட்டதும் ரசிகர்கள் இவரையே Ban செய்து வைத்துள்ளார்கள் என ரசிகர்களே கோபம் அடைந்துள்ளார்கள்.

 

சின்மயி பாடிய தக் லைஃப் பட பாடல் யூடியூபில் செம டிரெண்டிங்கில் எல்லாம் இடம் பிடித்தது. தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஒரு பிரபலம் சின்மயியை கண்டிப்பாக பாட வைப்பேன் என கூறியுள்ளார்.

 

அவர் வேறுயாரும் இல்லை விஜய் ஆண்டனி தான். ஒரு பேட்டியில் அவர், நான் விரையில் படங்களை இசையமைக்க உள்ளேன். அதில் கண்டிப்பாக சின்மயியை பாட வைப்பேன் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே விஜய் ஆண்டனி இசையில் சின்மயி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05