Jun 10, 2025 - 03:57 PM -
0
நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதன்முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தது. ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த வெற்றி, ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பையும், சந்தை மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
முதல் வெற்றி, பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆர்சிபி அணியின் உரிமையாளரான பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டயாஜியோ பிஎல்சி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் உரிமையை விற்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டயாஜியோ நிர்வாகம் ஆர்சிபி அணியின் முழு அல்லது பகுதி உரிமையை விற்க திட்டமிடுவதாகவும், இதற்கு ஆர்சிபி அணியை 2 பில்லியன் டொலர் வரையில் மதிப்பீட்டை எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, மேலும் அணியை விற்காமல் வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது.
18 வருடத்திற்கு பின்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின்பு இப்படியொரு முடிவு எடுத்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.