பல்சுவை
காரணத்தை கேட்டால் அசந்துருவீங்க!

Jun 10, 2025 - 04:30 PM -

0

காரணத்தை கேட்டால் அசந்துருவீங்க!

திருமணத்தின் போது பணம், தங்கம், நிலம் என வரதட்சணை வழங்குவது வழக்கம். ஆனால், வியட்நாமைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவரது பெற்றோர் இவற்றோடு சேர்த்து 100 அரிய வகை சிவேட் பூனைக்குட்டிகளையும் வரதட்சணையாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தப் பூனைக்குட்டிகளின் மதிப்பு மட்டும் ரூபா 50 லட்சத்திற்கும் மேல் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தப் பூனைக்குட்டிகள், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கோபி லுவாக் காபி கொட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

 

ஆசிய பனை பூனைகளுக்கு காபி விதைகள் உணவாக அளிக்கப்பட்டு, அவை முழுமையாக ஜீரணிக்கப்படாமல் கழிவு வழியாக வெளியேற்றப்படும் கொட்டைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

 

இந்த காபி கொட்டை தொழிலை தங்கள் மகள் தொடங்க உதவுவதற்காகவே இந்தப் பூனைகளை வரதட்சணையாக அளித்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

 

பூனைக்குட்டிகளுடன், மணமகளுக்கு 25 தங்கக் கட்டிகள், ரூபா 17 லட்சம் ரொக்கம், ரூபா 10 லட்சம் மதிப்புள்ள நிறுவனப் பங்குகள், ஏழு நிலங்கள் மற்றும் பிற விலையுயர்ந்த சொத்துக்களும் வழங்கப்பட்டுள்ளன.

 

மணமகளின் மாமியார்களும் ரூபா 6.5 லட்சம் ரொக்கம், பத்து தங்கக் கட்டிகள் மற்றும் வைர நகைகளை அளித்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05