Jun 10, 2025 - 05:29 PM -
0
அரசு மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்குகிறது என்ற தகவல் பரவி வருகிறது.
'பிரதம மந்திரி இலவச ஸ்கூட்டி திட்டம்' என்ற பெயரில், மத்திய அரசு அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் இலவசமாக ஸ்கூட்டர் வழங்குகிறது என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அரசு, கல்லூரி மாணவிகளுக்கு மத்திய அரசு இலவசமாக ஸ்கூட்டர் வழங்குகிறது என்ற செய்தி முற்றிலும் பொய்.
அரசு விளக்கம்
மத்திய அரசு இதுபோன்ற எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தையோ அல்லது தொடர்புடைய அமைச்சகங்களின் இணையதளத்தையோ பார்க்கவும் என்று பிஐபி அறிவுறுத்தியுள்ளது.