செய்திகள்
இரு மதுவரி அதிகாரிகள் கைது

Jun 10, 2025 - 07:44 PM -

0

இரு மதுவரி அதிகாரிகள் கைது

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், இந்தியாவில் இருந்து படகு மூலம் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1200 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

நீர்கொழும்பு பகுதியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அவற்றை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி மற்றும் மற்றொரு சந்தேக நபரும் இதன்போது கைது செய்யப்பட்டனர். 

இந்த பீடி சுற்றும் இலைகளை ஏற்றிச் செல்வதற்காக இரண்டு மதுவரி அதிகாரிகள் பாதுகாப்பு அளித்துள்ளதுடன், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

இந்த பீடி சுற்றும் இலைகளின் பெறுமதி சுமார் 1 பில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05