Jun 11, 2025 - 02:48 PM -
0
3 ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று (11) மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.சி.சி. கிண்ணத்தை வெல்ல நீண்ட காலமாக போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும், கிண்ணத்தை தக்க வைக்க அவுஸ்திரேலிய அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.