Jun 11, 2025 - 09:13 PM -
0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்கைளப் பெற்றுக்கொண்டுள்ளது.
தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க லோட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று (11) ஆரம்பமானது.
அவுஸ்திரேலிய அணி இன்றைய முதலாவது இன்னிங்ஸிற்காக 192 ஓட்டங்கள் வரையில் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் எஞ்சிய 5 விக்கெட்டுக்களும் 20 விக்கெட்டுக்களுக்குள் சரிந்தன.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் ரபாடா 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் வெப்ஸ்டர் 72 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.