Jun 14, 2025 - 03:14 PM -
0
காந்தாரா 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பில் நடக்கும் உயிரிழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'காந்தாரா'. தெய்வ வழிபாட்டையும், காடுகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் தொடர்பை அடிப்படையாக வைத்து ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இயக்கப்பட்டிருந்தது.
உலகளவில் இந்த படம் 400 கோடி ரூபா வசூல் சாதனை படைத்தது. தொடர்ந்து 'காந்தாரா: சாப்டர் 1' படத்தை தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பு ஷிவமோகா மற்றும் அகும்பே ஆகிய பகுதிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
அங்கு வந்திருந்த கேரளா, திருச்சூரைச் சேர்ந்த விஜூ விகே விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். முன்னதாக, படப்பிடிப்புக்கு செல்லும்போது நடிகர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
தொழில்நுட்பக் கலைஞரான கபில் என்பவர் கடந்த மாதம் கேரளாவில், சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார். இதே படத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் ராகேஷ் புஜாரி கடந்த மாதம்
தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவ்வாறு காந்தாரா 2 ஆம் பாகத்தில் பணியாற்றிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.