இந்தியா
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Jun 16, 2025 - 08:07 AM -

0

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல் நலக்குறைவால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பிறகு. டெல்லி வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

 

இந்நிலையில், சோனியா காந்தி நேற்று (15) மீண்டும் டெல்லியிலுள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளதாக வைத்தியர்கள் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

 

இதேபோல் கடந்த பிப்ரவரி மாதத்திலும் வயிறு வலி காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05