Jun 16, 2025 - 09:39 AM -
0
ஐபிஎல் தொடர் பல எண்ணற்ற வீரர்களின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது. அந்த வகையில் ஐபிஎல் சீசனில் வெறும் இம்பாக்ட் வீரராக நுழைந்த ஒரு வீரர் தற்போது இந்திய அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி பெரிய எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
அது வேறு யாரும் அல்ல. 24 வயது வீரரான துருவ் ஜுரல் தான். ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணி 20 லட்சம் ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இதில் இம்பாக்ட் வீரராக அணிக்குள் வந்து பட்டையைக் கிளப்பிய இந்திய அணியிலும் நான்கு டெஸ்ட் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாடி புகழ் பெற்றிருக்கிறார்.
துருவ் ஜூரல், தன்னுடைய வாழ்க்கையை எப்படி தொடங்கினார் என்பதை தற்போது பார்க்கலாம்,
ஆக்ராவில் ராணுவ வீரர் நீம் சிங்கின் மகனாகப் பிறந்த துருவ் ஜூரல், இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வந்திருக்கிறார். மகன் தொழில் முறை கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஆசைப்பட்டார்.
எனினும் ராணுவ வீரராக இருக்கும் அவருடைய தந்தைக்கு பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகள் இருந்தது. இதன் காரணமாக தனக்கு கிரிக்கெட் பேட் வாங்கி தரவில்லை என்றால் நான் வீட்டை விட்டு ஓடி விடுவேன் என்று மிரட்டி ஒரு நாள் முழுவதும் அறையில் கதவை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார் துருவ்.
மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தாய் தாம் அணிந்திருந்த ஒரு கோல்ட் செயினை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து துருவ் ஜூரலுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி கொடுத்திருக்கின்றார்.
இது துருவ் ஜூரலின் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக மாறி இருக்கின்றது. தமக்காக தாய் இவ்வளவு பெரிய தியாகத்தை செய்திருக்கிறார் என்பதை உணர்ந்து துருவ் ஜூரல், கிரிக்கெட்டில் தீவிரமாக கவனம் செலுத்த இருக்கின்றார்.
கல்லூரியில் நடைபெறும் தொடர்கள் எல்லாம் துருவ் இருக்கும் அனைத்து விருதுகளையும் வென்று வாங்கி வருவார். துருவ் ஜூரல் தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அதிரடி விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் என்ற பெயரை பெற்றார்.
இதனை கண்டறிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சம் ரூபாய் கொடுத்து துருவ் ஜூரலை வாங்கியது. இந்த பணத்தைப் பெற்ற துருவ் ஜூரல் தனது தந்தையின் கடனை அடைத்து எஞ்சிய பணத்தை முழுவதும் தாய்க்கு தங்க நகைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்.
துருவ் ஜூரலின் இந்த வளர்ச்சிக்கு அவருடைய உழைப்பு, ஒழுக்கம் கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்புதான் காரணம் என்று அவருடைய பயிற்சியாளர் பார்வேந்திரா கூறியுள்ளார்.
காலையிலே உணவை எடுத்துக்கொண்டு வலைப்பயிற்சிக்கு மற்றவர்களுக்கு முன் வரும் துருவ் ஜூரல். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என பல்வேறு வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு பின் மாலை நேரத்தில் விக்கெட் கீப்பிங் காண பயிற்சி எடுத்துக் கொண்டுதான் வீட்டிற்கு செல்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட நாளை தமது வாழ்நாளில் மறக்க முடியாது என்று துருவ் ஜூரல் கூறியுள்ளார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த அந்த இரவு தம்மால் தூங்கவே முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு ராணுவ வீரராக நாட்டிற்கு தந்தை சேவை செய்த நிலையில் தற்போது இந்திய அணிக்காக மகன் விளையாடப் போகிறார் என்ற மகிழ்ச்சியில் தனது தந்தை இருந்ததாகவும் துருவ் ஜூரல் கூறியுள்ளார்.
தற்போது கிடைத்திருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நாட்டுக்காக வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே தமது குறிக்கோளாக இருப்பதாக துருவ் ஜூரல் கூறியுள்ளார்.