Jun 16, 2025 - 10:47 AM -
0
அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் திரைப்படக் இயக்குனரான மகேஷ் ஜிராவாலா காணாமல் போனதை அடுத்து, அவரது குடும்பத்தினர் டிஎன்ஏ மாதிரிகளை வழங்கியுள்ளனர், மேலும் அவரது தொலைபேசி விபத்து நடந்த இடத்திலிருந்து வெறும் 700 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 12 ஆம் திகதி மதியம் 1:39 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், லண்டன் நோக்கிச் சென்ற விமானம் மேகனிநகரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதியது. குறித்த விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நரோடாவில் வசிக்கும் திரைப்படக் இயக்குனரான மகேஷ் ஜிராவாலா அன்று மதியம் அகமதாபாத் லா கார்டன் பகுதியில் ஒருவரைச் சந்திக்கச் சென்றதாக அவரது மனைவி ஹெதல் கூறினார்.
தெு தொடர்பில் அவரது மணைவி தெரிவிக்கையில்,
என் கணவர் மதியம் 1:14 மணிக்கு என்னை அழைத்து, அவரது சந்திப்பு முடிந்து வீடு திரும்பி வருவதாகக் கூறினார். இருப்பினும், அவர் திரும்பி வராததால், நான் அவரது தொலைபேசியில் அழைத்தேன், ஆனால் தொலைபேசி அது நிறுத்தப்பட்டு இருந்தது.
மதியம் 1:40 மணியளவில் விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குப் பிறகு அவரது தொலைபேசி நிறுத்தப்பட்டு இருந்தது. அவரது ஸ்கூட்டரும் தொலைபேசியையும் காணவில்லை. நாங்கள் அவரின் டிஎன்ஏவை சமர்ப்பித்துள்ளோம்.
பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போயிருந்தாலோ அல்லது வேறுவிதமாக சேதமடைந்திருந்தாலோ, விபத்தில் பலியானவர்களின் அடையாளத்தை காண பல முயற்சிகளில் அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது வரை குறித்த அதிகாரிகள் மகேஷ் ஜிராவாலாவின் டிஎன்ஏவை 47 பேருடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்னும் முடிவுகள் கிடைக்கவிலை என அவரது மணைவி தெரிவித்தார்.