Jun 16, 2025 - 12:24 PM -
0
50 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் நேற்று (15) மாலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது,
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் கடந்த வாரம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் விசாரணைகளின் பிரகாரம் கந்தரோடையில் 25 வயதான ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சோதனையிட்ட பொழுது 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர்.
இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
--