இந்தியா
250 பயணிகளுடன் தரையிறங்கிய போது விபத்து..! விமான நிலையத்தில் பதற்றம்.!

Jun 16, 2025 - 03:51 PM -

0

250 பயணிகளுடன் தரையிறங்கிய போது விபத்து..! விமான நிலையத்தில் பதற்றம்.!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (16) பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. 

சவூதி அரேபியாவில் இருந்து சவூதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஹஜ் பயணிகள் உட்பட 250 பேர் பயணித்த விமானம் லக்னோ விமான நிலையத்தை இன்று வந்தடைந்தது. இந்த விமானம் தரை இறங்கும் போது திடீரென சக்கரங்களில் தீப்பொறி பறந்தது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

ஆனால் விமானி, கவனமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கினார். இதனால் விமானத்தில் பயணம் செய்த 250 பேரும் உயிர் தப்பினர். 

அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த நிலையில் லக்னோ சம்பவம் குறித்த தகவல்கள் இன்றுதான் வெளியாகி இருக்கின்றன.

 

Comments
0

MOST READ