பல்சுவை
பிணத்தை திருமணம் செய்த வாலிபர்

Jun 17, 2025 - 11:43 AM -

0

பிணத்தை  திருமணம் செய்த வாலிபர்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிச்சலாலின் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சன்னி. இவர் அங்கு தொலைபேசி பழுதுபார்க்கும் கடை மற்றும் ஆபரண கடை வைத்துள்ளார்.

 

அதே பகுதியில் வாடகைக்கு வீடு பார்க்க சென்றபோது பிரியங்கா மாதேசியா (வயது 23) என்ற இளம் பெண்ணை கண்டார். முதல் பார்வையிலேயே இருவருக்கும் பிடித்து போனது.

 

அடிக்கடி பார்வையால் சந்தித்தனர். நெருங்கி பழக ஆரம்பித்தனர். இது காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த முடிவு செய்தனர். இது பற்றி அவருடைய பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

 

இதனை தொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது வருகிற நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

 

இந்த நிலையில் சன்னி மற்றும் பிரியங்கா 15 ஆம் திகதி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த பிரியங்கா மாதேசியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் அவருடைய உடலை சவப்பெட்டியில் வைத்திருந்தனர்.

 

காதலி தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவலறிந்த சன்னி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பிரியங்கா மாதேசியாவின் உடலை பார்த்து கதறி அழுது துடித்தார். மேலும் அவளை தனது மனைவியாக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினரிடம் கூறினார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து உள்ளூர் பூசாரி வரவழைக்கப்பட்டார். அவர் திருமணத்திற்கான மந்திரங்களை ஓதினார். அப்போது சன்னி, பிரியங்கா மாதேசியாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மாலை போட்டு திருமணம் செய்து கொண்டார்.

 

மேலும் சவப்பெட்டியை 7 முறை வலம் வந்து திருமண சடங்குகளை செய்தார். தொடர்ந்து காதலியின் பிணத்தின் அருகிலேயே அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதார். இதனை தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

 

இந்த காட்சிகள் மனதை உருக்குவதாக இருந்தது. தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது.

 

நான் பிரியங்காவை மிகவும் நேசித்தேன். நாங்கள் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தோம். அவள் இப்போது இல்லை என்றாலும் அவள் என் மனைவியாக வேண்டுமெனறு ஆசைப்பட்டேன்.

 

அதனால் அவரது பிணத்துக்கு குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05