Jun 17, 2025 - 12:35 PM -
0
ஸ்கொட்லாந்து டி20 முத்தரப்பு தொடரில் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்களுக்கு பிறகு நெதர்லாந்து வெற்றிப் பெற்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் முதல் முறையாக மூன்று சூப்பர் ஓவர்கள் நடந்த வரலாற்று நிகழ்வாக இது பதிவாகியுள்ளது.
போட்டியில் நேபாளம் நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்துவீசியது. முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளுக்கு 152 ஓட்டங்கள் எடுத்தது.
பதிலுக்கு, நேபாளம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 152 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை சமநிலையில் முடித்தது.
முதல் சூப்பர் ஓவர்: நேபாளம் 19/1 ஓட்டங்களை எடுத்த நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 19/0 ஓட்டங்களை பெற்று போட்டி சமநிலையில் முடித்தது.
இரண்டாவது சூப்பர் ஓவர்: நெதர்லாந்து 17/1 எடுத்த நிலையில், நேபாளம் இறுதி பந்தில் ஆறு ஓட்டங்களை பெற்று 17/0 உடன் மீண்டும் சமநிலையில் போட்டி நிறைவடைந்தது.
மூன்றாவது சூப்பர் ஓவர்: நேபாளம் அணி ஸாக் லயன்-காசெட்டின் பந்துவீச்சில் ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் மைக்கேல் லெவிட் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசி அணியை வெற்றிப் பெறச் செய்தார்.
இந்தப் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது.