Jun 17, 2025 - 01:06 PM -
0
இந்தியாவின் அரியானாவின் சோனிபட் அருகே அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நாட்டுப்புற ஹரியான்வி இசைக்கலைஞரும் மாடலுமான இருந்து வந்த ஷீத்தல் என்ற இளம் பெண் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 14 அன்று படப்பிடிப்புக்காக அஹார் கிராமத்திற்குச் சென்ற ஷீத்தல் வீடு திரும்பாததால், அவரது சகோதரி நேஹா கடத்தல் புகார் அளித்தார்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில், காண்டா கிராமத்திற்கு அருகிலுள்ள கால்வாயில் ஷீத்தலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலையின் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.