Jun 17, 2025 - 04:10 PM -
0
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான கடுமையான யுத்த நிலைமை இன்றும் அதிகரித்து காணப்படுகின்றன. இது இன்னும் மோசமான நிலைக்கு செல்ல கூடாது என்று நான் பிராத்திக்கின்றேன். இந்த யுத்தம் அணு ஆயுதப் போராக மாறும் அபாயம் காணப்படும் நிலையில், நமது குடிமக்களில் 10,000 - 20,000 பேரளவில் இஸ்ரேலில் வேலை செய்து வருகின்றனர்.
அவர்களின் நலனுக்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்பொருட்டு அரசாங்கம் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) சபையில் தெரிவித்தார்.
நமது நாட்டின் தொழில்துறை கட்டமைப்புக்கும், எரிபொருள் விலைகள் தொடர்பிலும் கடுமையான தாக்கத்தை இது ஏற்படுத்தி வரும் தருணத்தில், இது குறித்து வெளிக்கொணர்வதை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மக்களைப் பாதிக்கும் விடயங்கள் என்பதாலே இந்தப் பிரச்சினைகளை நான் எழுப்புகிறேன்.
எனவே, கூறுவதை செவிமெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் தெரிவித்தார்.