Jun 17, 2025 - 04:21 PM -
0
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது என்றும், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இருபக்கத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கட்டாம் அல் - அன்பியா மத்திய தலைமையகத்தின் தலைவராக சில நாட்களுக்கு முன்னர்தான் ஜெனரல் அலி ஷத்மானி நியமிக்கப்பட்டிருந்தார். இவர்தான் தாக்குலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், ஈரான் உடனடியாக ஷத்மானி கொல்லப்பட்டதை உறுதி செய்யவில்லை. இவர் ஈரானின் துணை புரட்சிகர காவல்படையின் ஜெனரலாக இருந்தவர்.