பல்சுவை
விடிந்ததும் அதிர்ச்சியில் உறைந்த மகள்

Jun 17, 2025 - 05:11 PM -

0

விடிந்ததும் அதிர்ச்சியில் உறைந்த மகள்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் அலங்கோலம் அரங்கேரியில் நடந்த மனதை உலுக்கிய சம்பவம் ஒன்று பொலிஸாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ராஜ் சிங் (32) என்ற இளைஞருக்கும், த்ரிதி என்ற இளம்பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

 

ஆனால், திருமணத்தின் முதலிரவு முடிந்த அடுத்த நாள், த்ரிதி தனது கணவர் ராஜ் சிங்கின் தொலைபேசியை பார்த்தபோது, அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

 

ராஜ் சிங்கும், த்ரிதியின் தாய் ருஹாணி (45)யும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கண்ட த்ரிதி, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றார். உடனடியாக இந்த விவகாரத்தை தனது குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதார்.

 

இதையடுத்து, இந்த சம்பவம் காவல்துறையின் கதவை தட்டியது. பொலிஸாரின் விசாரணையில் அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியாகின.

 

விசாரணையில், ராஜ் சிங்கும், ருஹாணியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்தது. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, பின்னர் கள்ள உறவாக மாறியது. இதனை அறிந்த அந்த நிறுவனம் இருவரையும் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கியது.

 

இருப்பினும், வேறு வேறு இடங்களில் பணியாற்றியபோதும், இருவரும் தங்கள் உறவை ரகசியமாக தொடர்ந்து வந்தனர். இதில் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், தனது கள்ள உறவுக்கு எந்தவித தடையும் ஏற்படக்கூடாது என்பதற்காக, ருஹாணி தனது மகள் த்ரிதியை ராஜ் சிங்கிற்கு திருமணம் செய்து வைத்தார்.

 

இதன் மூலம், எந்த சந்தேகமும் இல்லாமல் தனது கள்ள உறவை தொடரலாம் என ருஹாணி திட்டமிட்டிருந்தார். ஆனால், திருமணம் நடந்த அடுத்த நாளே இந்த விவகாரம் த்ரிதியால் அம்பலமாகியது.

 

இதையடுத்து, பொலிஸார் ராஜ் சிங்கையும், ருஹாணியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரம் சமூகத்தில் குடும்ப உறவுகளின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

 

பொலிஸாரின் இந்த வழக்கில் மேலும் ஆழமான விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05