Jun 17, 2025 - 05:24 PM -
0
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது.
இதானால் மிகுந்த எச்சரிக்கையின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை, வலல்லாவிட்ட, பாலிந்த நுவர, புலத்சிங்கள, கண்டி மாவட்டத்தில் கங்கை இஹல கோரள, கேகாலை மாவட்டத்தில் தெரணியகல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, பெல்மடுல்ல, எலபாத, கலவான, நிவித்திகல, அயகம மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.